மார்க்கெட்ல இப்போ.. இந்த 5 மாடல்களும் தான் பெஸ்ட்டு.. அவசரப்பட்டு ஏதோ ஒரு மொக்கை 5G Phone-ஐ வாங்கிடாதீங்க!
கிட்டத்தட்ட நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் 5ஜி சேவைகள் அறிமுகமாகிவிட்டது. இருப்பினும் நீங்கள் இன்னுமும் 4ஜி ஸ்மார்ட்போனை (4G Smartphone) தான் பயன்படுத்துகிறீர்களா? இன்னமும் 5ஜி போனுக்கு (5G Phone) அப்கிரேட் ஆகவில்லையா?
ஒருவேளை.. எந்த நிறுவனத்தின் 5ஜி போனை நம்பி வாங்குவது என்பதில் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருக்கிறதா? அல்லது எந்த பட்ஜெட்டில் வாங்கினால் நன்றாக இருக்கும் என்கிற கேள்வி உள்ளதா? மேற்கண்ட கேள்விகளுக்கான உங்களுடைய பதில் "ஆம்" என்றால்.. இதோ அதற்கான பதில்கள்:

இந்தியாவில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான நியாயமான பட்ஜெட் என்னவென்று கேட்டால்.. எங்களுடைய பதில் - ரூ.16,000 முதல் ரூ.25,000 க்குள் இருக்கலாம். பெரும்பாலான மொபைல் போன் பிராண்டுகளிடம் 5ஜி-எனேபிள்டு ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் கூட நீங்கள் சாம்சங், ரியல்மி, ரெட்மி மற்றும் நோக்கியா நிறுவனங்களின் மாடல்களை கருத்தில் கொள்ளாலாம்.
அப்படியாக மேற்கண்ட 4 பிராண்டுகளிடம் இருந்து, ரூ.11,000 டூ ரூ.24,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஐந்து பெஸ்ட் 5ஜி போன்களின் (Best 5G Phones) பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த 5 ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்று, உங்களுக்கானதாக இருக்கலாம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை!

01. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): மொத்தம் 13 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவுடன் வரும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த 5ஜி அனுபவம் மற்றும் வேகமான கனெக்டிவிட்டியை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது 5என்எம் எக்ஸினோஸ் 1330 ஆக்டாகோர் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் உடன் வருகிறது.
மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 5.0, ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷன் உடனான 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, மிகப்பெரிய 6000mAh பேட்டரி, 50எம்பி மெயின் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,990 முதல் வாங்க கிடைக்கிறது.

02. ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G): இதுவொரு பெஸ்ட் 5ஜி போன் மட்டுமல்ல. 120ஹெர்ட்ஸ் கர்வ்டு டிஸ்பிளே, டைமன்சிட்டி 7050 சிப்செட், 100எம்பி ப்ரோலைட் கேமரா, 67W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் போனாகவும் உள்ளது. இது ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
03. நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G): இது பட்ஜெட்வாசிகளுக்கு ஏற்ற 5ஜி ஸ்மார்ட்போனாகும். இது ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் (Snapdragon 480 Plus 5G Chipset) மூலம் இயக்கப்படுகிறது, இது வேகமான மற்றும் நம்பகமான 5ஜி அனுபவத்தை உறுதி செய்கிறது.
6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 11 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் மற்றும் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்), 50எம்பி ட்ரிபிள் ரியர் ஏஐ கேமரா செட்டப், 3 நாட்கள் நீடிக்கும் பேட்டரி லைஃப், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் வலைத்தளத்தில் ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த 5ஜி சிப்செட்களில் ஒன்றான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 மொபைல் பிளாட்ஃபார்மை பேக் செய்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன், 50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பெ கேமரா 5000mAh பேட்டரி, ரீடெயில் பாக்ஸில் 22.5W சார்ஜர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்,. தற்போது அமேசானில் ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G): இது 12 பேண்டுகளுக்கான ஆதரவை வழங்கும் எக்ஸினோஸ் 1280 ஆக்டாகோர் 2.4ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது. மேலும் 6.5-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, 13எம்பி செல்பீயி கேமரா, 6000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிர்து. இது ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications