Home
Mobile

ரூ.25,000 பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்கள்.. எந்த 5G Phone வாங்கலாம்.. டாப் 4 லிஸ்ட்!

இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் 5G போன்களை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கான சிறந்த 5G போனை (5G Phone) தேர்ந்தெடுப்பது நல்லது. உங்கள் பட்ஜெட் ரூ.25,000 என்றால், பக்க அம்சங்கள் உடன் பிரீமியம் டிசைனில் வெளியாகி உள்ள இந்த நான்கு போன்களை தாராளமாக வாங்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): இந்த போன் 8ஜிபி ரேம் - 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் - 256ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 2 வேரியண்டுகளில் வருகிறது. 6.72 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடன் இருக்கிறது. அதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் வருகிறது.

ரூ.25,000 பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்கள்.. எந்த 5G Phone வாங்கலாம்!

108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்னும் ட்ரிபிள் ரியர் செட்டப்பை கொண்டுள்ளது. 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரையில் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999-க்கு விற்பனையாகிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் ரூ.21,999-க்கு கிடைக்கிறது.

போகோ எக்ஸ் 5 புரோ 5ஜி (Poco X5 Pro 5G): 6.67 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் pOLED டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வெயிட் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்ற ட்ரிபிள் ரியர் செட்டப் உள்ளது.

ரூ.25,000 பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்கள்.. எந்த 5G Phone வாங்கலாம்!

16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5,000mAh பேட்டரி உள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ 10 புரோ பிளஸ் 5ஜி (Realme 10 Pro+ 5G): இந்த ரூ.25,000 செக்மெண்டில் கர்வ்ட் டிஸ்பிளே (Curved Display) கொண்ட ஒரே போன் ரியல்மீ 10 புரோ பிளஸ் 5ஜி மட்டும்தான். பிரீமியம் டிசைன் வேண்டும் என்றால் இந்த போன் நல்ல சாய்ஸ் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.

ரூ.25,000 பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்கள்.. எந்த 5G Phone வாங்கலாம்!

ஆண்ட்ராய்டு 13 உடன் ஆக்டோ-கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 5G சிப்செட் உள்ளது. வழக்கம்போல ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. 16எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 67W சூப்பர்வூக் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. விலையை பொறுத்தவரையில், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.

ஐக்யூ செட் 6 புரோ 5ஜி (iQOO Z6 Pro 5G): 6.44 இன்ச் AMOLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ராசஸர் வருகிறது. 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. 16 எம்பி செல்பீ கேரமா உள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 4700 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ஐக்யூ செட் 6 புரோ 5ஜி போனின் விலையை பொறுத்தவரையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 24,999-க்கு விற்பனையாகிறது.

ரூ.25,000 பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்கள்.. எந்த 5G Phone வாங்கலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 5G smartphones in India under Rs 25000 in May 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X