கப்சிப்னு வாங்குவீங்க.. பட்ஜெட் விலை.. 108எம்பி கேமரா.. பெஸ்ட் 3 ஸ்மார்ட்போன்கள்.. இதோ பட்டியல்..
இந்தியாவில் தற்போது சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு 108எம்பி கேமரா கொண்ட போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.
குறிப்பாக ரியல்மி, சாம்சங், இன்பினிக்ஸ் நிறுவனங்களின் 108எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகமாக அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 108எம்பி கேமரா கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களை இப்போது பார்ப்போம்.

டாப்-1: இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஆனது 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் லென்ஸ் +ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Mali-G57 GPU) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வருகிறது குறிப்பாக இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் 45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனின் ரூ.14,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 வரை தள்ளுபடி கிடைக்கும்.
டாப்-2: ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
டைமன்சிட்டி 6100 பிளஸ் 5ஜி சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இதில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் வெறும் 17 நிமிடங்களில் 0-50 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். குறிப்பாக ரியல்மி 11 5ஜி ஆனது 6.72 இன்ச் டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி போன் குளோரி பிளாக் மற்றும் குளோரி கோல்டு ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் அமேசான் தளத்தில் ரூ.17,999 விலையில் ரியல்மி 11 5ஜி போனை வாங்க முடியும். ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ800 தள்ளுபடி கிடைக்கும்.
டாப்-3: இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஆனது டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

6.67 இன்ச் புல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். இந்த டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்,900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) மற்றும் 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ. மாலி ஜி77 எம்சி9 (ARM Mali-G77 MC9) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன். குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனை ரூ.21,999 விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








