நல்ல மாசம் பொறக்குது.. ஒயிட் அன்ட் ஒயிட்ல 1 மாடல்.. 2 பட்ஜெட் மாடல்.. ஜூன் மாதத்தில் 3 புது OnePlus போன்கள்!
ஆரம்பமே அட்டகாசமாக இருக்கும் போலேயே என்று கூறும்படியாக.. 2024 ஜூன் மாதத்தில்.. ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 3 புதிய ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதில் ஒன்று பிரீமியம் மாடலின் புதிய கலர் ஆப்ஷன் ஆகும். மீதமுள்ள இரண்டும் பட்ஜெட்-விலை மாடல்கள் ஆகும்? அதென்ன மாடல்கள்? அவைகள் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? ஜூன் 2024-ல் வேறு எந்தெந்த நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மாட்போன்களின் அறிமுகத்தை திட்டமிட்டுள்ளன? இதோ விவரங்கள்:
புதிய கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும் பிரீமியம் மாடல் எது? அது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனாகும். இந்தியாவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் மூன்றாவது கலர் ஆப்ஷன் வருகிற ஜூன் 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு கலர் ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 12-ன் மூன்றாவது மற்றும் லிமிடெட்-எடிஷன் கலர் ஆப்ஷன் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த கலர் ஆப்ஷனை க்ளேஷியல் ஒயிட் (Glacial White) என்று அழைக்கிறது.
க்ளேஷியல் ஒயிட் கலர் ஆப்ஷனில் வண்ணம் மட்டுமே வேறுபடும்; அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது லிமிடெட்-எடிஷன் ஆக இருந்தாலும் கூட.. இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்கள் தான க்ளேஷியல் ஒயிட் கலர் ஆப்ஷனிலும் இருக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் 12 க்ளேஷியல் ஒயிட் கலர் ஆப்ஷன் ஆனது ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய கலர் ஆப்ஷன் ஏற்கனவே வாங்க கிடைக்கும் ப்ஃளோயி எமெரால்ட் (Flowy Emerald) மற்றும் சில்கி பிளாக் (Silky Black) கலர்ஆப்ஷன்களுடன் சேர்ந்து விற்பனைக்கு பட்டியலிடப்படும். பழைய கலர் ஆப்ஷன்களை போலவே புதிய வெள்ளை நிற வேரியண்ட்டும் ரூ.64,999 என்கிற ஆரம்ப விலைக்கு வெளியாகலாம்.
ஜூன் மாதம் அறிமுகமாகும் 2 பட்ஜெட்-விலை ஒன்பிளஸ் மாடல்கள் என்னென்ன? ஒன்பிளஸ் 12-ன் க்ளேஷியல் ஒயிட் கலர் ஆப்ஷனோடு சேர்த்து 2024 ஜூன் மாதத்தில் நோர்ட் சீரிஸின் கீழ் 2 புதிய மாடல்கள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது - ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் (OnePlus Nord CE 4 Lite) மாடல்கள் ஆகும்.
இவ்விரு ஒன்பிளஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களும் முன்னதாக வெளியான மாடல்களை விட மாறுபட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சிப்செட்டை கொண்டிருக்கும். நோர்ட் 4 மாடலானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம், நோர்ட் சிஇ 4 லைட் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) கொண்டு இயங்கலாம்.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 4 மாடலானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. அது உண்மையாகும் [பட்சத்தில், 50எம்பி ஓஐஎஸ் மெயின் கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,500எம்ஏஎச் பேட்டரி, ஆவ் ண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் போன்றவைகளை கொண்டிருக்கலாம். விலையை பொறுத்தவரை நோர்ட் 4 ரூ.25,000 க்குள்ளும், நோர்ட் சிஇ 4 லைட் ரூ.20,000 க்குள்ளும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








