Home
Mobile

எனக்கு END-ஏ கிடையாது.. தொடர்ச்சியாக 4வது புதிய போனை அறிமுகம் செய்த Redmi.. இன்னும் 2 வருதாம்!

ரியல்மி, மோட்டோரோலா, போக்கோ, ஒப்போ, விவோ, நோக்கியா, லாவா, இன்பினிக்ஸ் என ரெட்மியுடன் (Redmi) போட்டியிடும் நிறுவனங்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருந்தாலும் கூட "எனக்கு எண்ட்டே கிடையாது" என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறது ரெட்மி நிறுவனம்!

அதனொரு பகுதியாக ரெட்மி அதன் பிரபலமான நோட் 12 சீரீஸின் (Redmi Note 12 Series) கீழ் தொடர்ச்சியாக புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே இந்த சீரீஸின் ரெட்மி நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி, நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகமாகிவிட்ட நிலையில் தற்போது மேலுமொரு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 4வது புதிய போனை அறிமுகம் செய்த Redmi.. இன்னும் 2 வருதாம்!

நாம் இங்கே பேசுவது ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். 5ஜி சேவைகளை மனதில் கொண்டு தொடர்ச்சியாக மூன்று 5ஜி போன்களை அறிமுகம் செய்த கையோடு பட்ஜெட் விலை வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு நோட் 12 சீரீஸில் 4ஜி மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனானது வருகிற மார்ச் 30 அன்று இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? போன்ற விவரங்கள் இதோ:

ரெட்மி நோட் 14 4ஜி அம்சங்கள்: இது 2400 x 1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட MIUI 14 மூலம் இயங்குகிறது. ப்ராசஸரை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டை கொண்டுள்ளது.

8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 1டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவும் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பெறுகிறது.

அதில் 50எம்பி சாம்சங் JN1 மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ ஷூட்டர் உள்ளது, முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஐபி53 ரேட்டிங் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 12 4ஜி விலை: இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வெளியாகியுள்ளது. இதன் பேஸிக் 4ஜிபி + 64ஜிபி ஆப்ஷனானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 17,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதே போன்ற விலை நிர்ணயத்தை நாம் இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம். இந்த போன் அனைத்து சந்தைகளிலும் ஐஸ் ப்ளூ, மின்ட் ப்ளூ மற்றும் ஓனிக்ஸ் க்ரே என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். மீண்டும் நினைவூட்டும் வண்ணம், இதே ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 30 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும் 2 புதிய போன்களும் அறிமுகமாகும்! மேற்கண்ட புதிய ரெட்மி ஸ்மார்ட்போனை தவிர்த்து மேலும் 2 புதிய ரெட்மி மாடல்களும் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரெட்மி நோட் 12 டர்போ (Redmi Note 12 Turbo) வருகிற மார்ச் 28 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ரெட்மி 12எஸ் (Redmi 12S) மாடலும் கூடிய விரைவில் வெளியிடப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Before India Launch On March 30 Redmi Note 12 4G Introduced Globally Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X