Home
Mobile

ரூ.500, ரூ.1000 இல்ல.. முழுசா ரூ.10,000 விலைக்குறைப்பு.. இனி இந்த Realme போனின் விற்பனை பிச்சுக்க போகுது!

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தை பார்த்து "நீ என்ன ஆஃபர் தர்றது.. நானே தர்றேன் பாரு!" என்று கூறும்படியாக ரியல்மி (Realme) நிறுவனம், அதன் ரியல்மி ஜிடி நியோ 3டி 5ஜி (Realme GT Neo 3T 5G) ஸ்மார்ட்போன் மீது ரூ.10,000 என்கிற விலைக்குறைப்பை (Price Cut) அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனை (Flipkart Big Saving Days 2023) ஆரம்பிக்கும் முன்னர், ரியல்மி அறிவித்துள்ள இந்த அதிரடி விலைக்குறைப்பானது, புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களை ஈர்க்கும்படி உள்ளதால்.. வரும் நாட்களில் இந்த போனின் விற்பனை பட்டையை கிளப்புமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முழுதாக ரூ.10,000 விலைக்குறைப்பை பெற்றுள்ள Realme ஸ்மார்ட்போன்!

ரூ.10,000 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ள ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? இது மிகவும் பழைய ஸ்மார்ட்போனா? இது சரியாக எப்போது அறிமுகமானது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்:

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்தது. அதாவது இது இந்தியாவில் அறிமுகமாகி முழுதாக ஓராண்டு கூட ஆகவில்லை. அறிமுகத்தின் போது இது ரூ.29,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இருந்தது.

தற்போது ரூ.10,000 என்கிற விலைக்குறைப்பிற்கு பின்னர் ரூ.19,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை நிர்ணயமானது ஏற்கனவே பிளிப்கார்ட் வலைதளத்தில் பிரதிபலிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது டேஷ் யெல்லோ, டிரிஃப்டிங் ஒயிட் மற்றும் ஷேட் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது கடந்த டிசம்பரில் தான் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0-க்கு அப்டேட் ஆனது. மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.62-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் இ4 அமோஎல்இடி டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 (Qualcomm Snapdragon 870) ப்ராசஸர் உடன் வரும் ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது 8ஜிபி வரையிலான எல்பி டிடிஆர்4எக்ஸ்) (LPDDR4x) ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 3.1 (UFS 3.1) இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை 64 எம்பி மெயின் கேமரா (எஃப்/1.8) + 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா (எஃப்/2.3) + 2 எம்பி மேக்ரோ கேமரா (எஃப்/2.4) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) வழங்குகிறது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பீ கேமரா (எஃப்/2.45) உள்ளது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை இதில் 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகள் உள்ளன. 5,000mAh பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 80W சூப்பர்டார்ட் (SuperDart) சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 12 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Before Flipkart Big Saving Days 2023 Sale Realme GT Neo 3T 5G Phone Gets Rs 10000 Price Cut in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X