அனல் பறக்கும் ஆர்டர்கள்.. இதான் லாஸ்ட் இனி கிடைக்காது.. வெறும் ரூ.12,700 க்கு விற்கப்படும் iPhone மாடல்!
கனவில்லை நிஜம் தான்.. பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) வெறும் ரூ,12,700 க்கு ஒரு ஐபோன் (iPhone) மாடல் வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? அதன் மீது பிளிப்கார்ட் வழங்கும் சலுகைகள் என்னென்ன? அதை ரூ.12,700 க்கு வாங்குவது எப்படி? இதோ விவரங்கள்:
வருகிற செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) மாடல்களை அறிமுகம் செய்த பின்னர் அதன் ஐபோன் 12 (iPhone 12) மாடலின் விற்பனையை நிறுத்திவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறியாதோர்களுக்கு ஐபோன் 12 மாடல் தான் தற்போதைக்கு வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான ஐபோன் (Cheapest iPhone) மாடல் ஆகும்.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் (Apple Online Store) ஐபோன் 12 மாடல் ஆனது ரூ.59,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இதே ஐபோன் 12 ஆனது பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.53,999 என்கிற ஆரம்ப விலைக்கு வாங்க கிடைக்கிறது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 மீது கிடைக்கும் எல்லா சலுகைகளையும் நீங்கள் பயன்படுத்தினால், அதை வெறும் ரூ.12,700 க்கு வாங்க முடியும்.
பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) கார்ட்டை பயன்படுத்தி ஐபோன் 12 மாடலை வாங்கினால் 5% கேஷ்பேக்கை (Cashback) பெறலாம், இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 12 இன் விலையை ரூ.51,300 ஆக குறைக்க முடியும். இது தவிர, பிளிப்கார்ட் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.38,600 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியையும் (Exchange Offer) வழங்குகிறது.
இப்படியாக அனைத்து வங்கிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளையும் நீங்கள் பயன்படுத்தினால், ஆப்பிள் ஐபோன் 12 மீது மொத்தமாக ரூ.41,299 என்கிற தள்ளுபடியை பெறலாம் மற்றும் ஐபோன் 12 மாடலின் இறுதி விலையை (Final Price) ரூ.12,700 ஆக குறைக்கலாம். உங்களுக்கு கிடைக்கும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ஆனது நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் வேலை செய்யும் நிலையை பொறுத்து வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அம்சங்களை பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 12 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி (Super Retina XDR OLED) டிஸ்பிளேவுடன் வருகிறது. இது அப்பாலின் சொந்த ஏ14 பயோனிக் சிப் (A14 Bionic Chip) மூலம் இயக்கப்படுகிறது. பழைய மாடலாக இருந்தாலும் கூட இது செராமிக் ஷீல்ட் (Ceramic shield) மற்றும் ஐபி68 ரேட்டிங் (IP68 Rating) உடன் வருகிறது.
கேமராவை பொறுத்தவரை, இதன் பின்புறத்தில் 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் நைட் மோட் (Night Mode), 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்குடன் (4K Dolby Vision HDR recording) கூடிய 12எம்பி ட்ரூட்ப்த் செல்பீ கேமரா உள்ளது. 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 12 ஆனது இன்னமும் நல்ல அளவிலான விற்பனையை சந்திக்கும், பிரீமியம் அம்சங்களுடன் வரும், கொடுக்கும் பணத்திற்கான மதிப்புடைய ஒரு ஐபோனாக திகழ்கிறது.
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை பொறுத்தவரை, இது இன்னும் சில வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் கீழ் 4 மாடல்கள் வெளியாகலாம் - ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15), ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max).


Click it and Unblock the Notifications








