பொறுமை முக்கியம்.. பொசுக்குனு Poco F5 5G-ஐ ஆர்டர் போட்டுறாதீங்க.. அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க.. ஏன்னா?
முடிவெடுக்கும் போது, பொறுமை மிகமிக அவசியம். குறிப்பாக ரூ.30,000 செலவு செய்து ஒரு புதிய ஸ்மார்ட்போனை (New Smartphone) வாங்கும் போது.. அது ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த போன் வாங்கும் வரையிலாக நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
அப்படியாக வருகிற மே 16 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் போக்கோ எஃப்5 5ஜி (POCO F5 5G) ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற ஐடியா அல்லது ஆசை உங்களுடம் இருந்தால்.. கீழ்வரும் 5 ஸ்மார்ட்போன்களை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் கீழ்வரும் 5 ஸ்மார்ட்போன்களுமே.. வருகிற மே 16 முதல் ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படவுள்ள போக்கோ எஃப்5 5ஜி-க்கு பதிலாக நீங்கள் வாங்க கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களாக இருக்கும். அதாவது போக்கோ எஃப்5-க்கான சிறந்த ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களாக (Top Alternative Smartphones) இருக்கும்.
ஐக்யூ நியோ 7 (iQOO Neo 7): ரூ 28,999 க்கு வாங்க கிடைக்கும் ஐக்யூ நியோ 7 ஆனது 120ஹெர்ட்ஸ் 6.78 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, டைமன்சிட்டி 8200 5ஜி சிப்செட், 6எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 16எம்பி செல்பீ கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் (Redmi Note 12 Pro Plus): ரூ 29,999 க்கு வாங்க கிடைக்கும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட், 200எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 16எம்பி செல்பீ கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G): ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஆனது 6.4-இன்ச் எஃப்எச்டி+ டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே, எக்ஸிநோஸ் 2100 ப்ராசஸர், 12எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 4500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R): ரூ 39,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 6.7-இன்ச் 120ஹெர்ட்ஸ் சூப்பர் ஃப்ளூயிட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 ப்ராசஸர், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 100W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
நத்திங் போன் 1 (Nothing Phone 1): ரூ 28,999 க்கு வாங்க கிடைக்கும் நத்திங் போன் 1 ஆனது 120ஹெர்ட்ஸ் 6.55-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் ப்ராசஸர், 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 33W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 4500mAh பேட்டரி, ஐபி53 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








