அப்பாலே போ.. OnePlus 11 க்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்?
இந்தியாவில், ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனின் ஓப்பன் சேல் (Open Sale) பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஒருவேளை ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உங்களை ஈர்க்கும்படி இல்லையென்றால், அதற்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் என்கிற பட்டியல் இதோ:
முதலில் OnePlus 11 5G போனின் விலை விவரங்களை பார்த்து விடலாம்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11 5ஜி மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.56,999 என்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.61,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சரி வாருங்கள் இப்போது ஒன்பிளஸ் 11 5ஜி-க்கான ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களை (Alternative Smartphones) பற்றி பார்ப்போம்; அதாவது ஒன்பிளஸ் 11 5ஜி-க்கு "இணையான" வேறு 4 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்:
04. OnePlus 11 vs OnePlus 10 Pro

ஒன்பிளஸ் 11 5ஜி-க்கான மிகப்பெரிய போட்டியாளர் ஒன்பிளஸ் நிறுவனத்திற்குள்ளேயே இருக்கிறது. அது ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலாகும்.
ஒன்பிளஸ் 10 ப்ரோவில் கிடைக்கும் சிறந்த வாட்டர் ப்ரூஃபிங் (Water Proofing) மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) உள்ளிட்ட பல நல்ல அம்சங்கள் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் இல்லை.
எனவே ஒன்பிளஸ் 11-க்கு பதிலாக ஒன்பிளஸ் 10 ப்ரோவை வாங்குவது உண்மையிலேயே ஒரு நல்ல முடிவு தான். ஒன்பிளஸ் 10 ப்ரோவின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.60,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.65,999 க்கும் வாங்க கிடைக்கிறது!
03. OnePlus 11 vs Samsung Galaxy S22

உங்களிடம் பெரிய பட்ஜெட் இருந்தால் நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்23 மாடலை வாங்கலாம். இல்லையென்றால் சாம்சங் கேலக்ஸி எஸ்22 மாடலை கருத்தில் கொள்ளலாம்.
தற்போது எஸ்22 மாடலின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.57,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது அசல் விலையில் இருந்து ரூ.15,000 குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
02. OnePlus 11 vs Motorola Edge 30 Ultra

144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மாடல், ஒன்பிளஸ் 11 5ஜி-க்கான மற்றொரு சிறந்த ஆல்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போனாகும்.
இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது. அதுமட்டுமின்றி, இது நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு இன்டர்பேஸையும் வழங்குகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
01. OnePlus 11 vs iQOO 11

ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போனை, ஒன்பிளஸ் 11-ஐ பின்னுக்கு தள்ளும் ஒரு மாடலென்று கூறுவதில் யாருக்குமே எந்த தயக்கமும் இருக்காது.
ஏனென்றால், ஒன்பிளஸ் 11-ஐ போலவே ஐக்யூ 11 ஸ்மார்ட்போனும் கூட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, 120W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், மிரட்டலான டிசைன் மற்றும் ஹை-குவாலிட்டி (144ஹெர்ட்ஸ், 2கே) டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.
ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கும் 16ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.64,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது!


Click it and Unblock the Notifications