அவசரப்பட்டு இந்த மாசம் புது போன் வாங்கிட்டா? அடுத்த மாசம் ஃபீல் பண்ணுவீங்க!

|

உங்களிடம் ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற திட்டம் இருந்தாலும் சரி, அல்லது ஒரு நல்ல Vivo ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற ஐடியா இருந்தாலும் சரி - அவசரப்பட்டு எதையும் செய்துவிட வேண்டாம்!

அதாவது அவசர அவசரமாக இந்த மாதமே (ஆகஸ்ட் 2022) எந்த புது பட்ஜெட் ஸ்மார்ட்போனையும் வாங்கிவிட வேண்டாம். மீறினால்.. அடுத்த மாதம் (செப்டம்பர் 2022) நீங்கள் சற்றே வருத்தப்படலாம்!

ஏனெனில்?

ஏனெனில்?

டிப்ஸ்டர் பராஸ் குக்லானி வழியாக கிடைத்த ஒரு தகவலின்படி, Vivo நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் தானே இந்த பிராண்டின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக Vivo V25 Pro அறிமுகமானது என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான்! ஆனால் அதுவொரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும்.

அது 120Hz டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 1300 SoC மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது. இந்த மிட்-ரேன்ஜ் போனை தொடர்ந்து, விவோ நிறுவனம் தனது ஒட்டுமொத்த கவனத்தையும் பட்ஜெட் பிரிவுக்கு திருப்புவது போல் தெரிகிறது.

சரியான நேரத்தில் ரூ.3000 விலைக்குறைப்பை பெற்ற தரமான Samsung 5G போன்!சரியான நேரத்தில் ரூ.3000 விலைக்குறைப்பை பெற்ற தரமான Samsung 5G போன்!

அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் 6 விவோ பட்ஜெட் போன்கள்!

அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் 6 விவோ பட்ஜெட் போன்கள்!

பிரபல டிப்ஸ்டர் ஆன குக்லானியின் கூற்றுப்படி, அடுத்த மாதம் இந்தியாவில் விவோ நிறுவனத்தின் ஆறு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

அதாவது Vivo Y02s, Vivo Y16, Vivo Y35, Vivo Y22, Vivo Y22s மற்றும் Vivo Y01A என்கிற 6 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

இவைகள் அனைத்துமே ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்பதால் கண்டிப்பாக பட்ஜெட் விலை நிர்ணயத்தையே பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சரியாக என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

சரியாக என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

துரதிர்ஷ்டவசமாக, மேற்குறிப்பிட்ட 6 விவோ ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்களைத் தவிர, டிப்ஸ்டர் குக்லானி, ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலைகள் பற்றிய அந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

இருப்பினும், ப்ரைஸ்பாபா வழியாக லீக் ஆன Vivo Y22s ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் மற்றும் லைவ் போட்டோக்களை வைத்து பார்க்கும் போது, விவோ ஒய்22எஸ் ஆனது கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Y21s ஸ்மார்ட்போனின் "வாரிசாக" இருக்கும் என்பதை அறிய முடிகிறது.

உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!

Vivo Y22s டிசைன், கலர் மற்றும் அம்சங்கள்!

Vivo Y22s டிசைன், கலர் மற்றும் அம்சங்கள்!

Vivo Y22s ஆனது 6.55 இன்ச் அளவிலான வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது HD ரெசல்யூஷன் உடனான LCD பேனலாக இருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 50MP மெயின் லென்ஸ் + 2MP சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். 2-வது கேமராவானது டெப்த் அல்லது மேக்ரோ ஷாட்களுக்கானதாக இருக்கலாம்.

மேலும் இந்த விவோ போன், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படலாம்.

Vivo Y22s என்ன விலைக்கு அறிமுகமாகும்?

Vivo Y22s என்ன விலைக்கு அறிமுகமாகும்?

இந்தியாவிற்கு வரவிருக்கும் இந்த விவோ போனின் "சரியான" விலை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனாலும் கூட, இது கண்டிப்பாக பட்ஜெட் பிரிவின் கீழ் தான் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். எங்களின் கணிப்பின்படி, இது ரூ.15,000-க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Before Buying New Phone in India Consider these 6 Upcoming budget Phones From Vivo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X