இரண்டு மலிவு விலை போன்கள்: பீட்டெல் அறிமுகம்

By Super
|
இரண்டு மலிவு விலை போன்கள்: பீட்டெல் அறிமுகம்
ஜம்மு: ரூ.1,499 மற்றும் ரூ.1,799 விலைகளில் இரண்டு மலிவு விலை போன்களை பீட்டெல் பிராண்டில் பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமாக திகழும் பார்தி என்டர்பிரைசஸ், ஏர்டெல் பிராண்டில் தொலைதொடர்பு சேவையையும், பீட்டெல் பிராண்டில் மொபைல்போன்களை தயாரித்து வழங்கி வருகிறது.

அடித்தட்டு மக்களின் வசதிக்கேற்ப நவீன அம்சங்கள் நிறைந்த போன்களை இந்த நிறுவனம் தொடர்ந்து அறி்முகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பீட்டெல் ஜிடி-310 மற்றும் ஜிடி-218 என்ற பெயரில் இரண்டு மலிவு விலை போன்களை பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதில், பீட்டெல் ஜிடி-310 மாடல் ரூ.1,799 விலையிலும், ஜிடி-218 மாடல் ரூ.1,499 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இதில், ஜிடி-310 போன் டியூவல் சிம் வசதிகொண்டது. 1,200 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது. எப்எம் ரேடியோ, ஒன் டச் டார்ச் லைட், விஜிஏ கேமரா, ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் அம்சங்களையும் கொண்டுள்ளது.
ட்வின் மெமரி ஸ்லாட் கொண்ட இதில் 2ஜிபி மற்றும் 8 ஜிபி மெமரி கார்டுகளை பொருத்திக்கொள்ளலாம்.

இதேபோன்று, ஜிடி-218 போனும் டியூவல் சிம் வசதிகொண்டதாகவே வந்துள்ளது. இதில், 1,800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 25 நாட்கள் ஸ்டான்ட்- பை மோடிலும், 15 மணிநேரம் டாக்டைமையும் கொடு்க்கும் வல்லமை கொண்டது.

ஸ்டைலான வடிவமைப்பு, துல்லியமான ஒலி, வீடியோ பிளேபேக், அனைத்து ஆடியோ பார்மெட்டுகளிலும் இயங்கும் வசதி உள்ளி்ட்டவையும் இருக்கிறது. இது 1.8 இஞ்ச் டச் ஸ்கிரீன், எப்எப் ரேடியோ மற்றும் 8 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனை பெறும் வசதிகளை பெற்றிருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X