புதிய டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்தியது பீட்டெல்

Posted By: Staff

புதிய டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்தியது பீட்டெல்
ஜிடி என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது பீட்டெல் நிறுவனம். இந்த 2.8 டச் ஸ்கிரீன் வசதியைக் கொண்டுள்ளது. இரண்டு சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடிய டியூவல் சிம் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிடி 93 கிராம் இலகுவான எடை கொண்ட மொபைல். இந்த மாடல் 2ஜிஎஸ்எம் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் 1.3 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது புகைப்படம் எடுப்பதற்கு போதுமான துல்லியத்தை வழங்குகிறது.

அதிகபட்சம் 1280 X 1024 பிக்ஸல் ரிசல்யூஷனை கொடுக்கிறது. இதில் டஜிட்டல் சூம் வசதி உள்ளதால் தூரத்தில் உள்ளவற்றை பக்கத்திலும், மிகத் தெளிவாகவும் பார்க்க முடியும். இதில் இன்னும் ஒரு ஆச்சர்யத்தக்க விஷயம் என்னவென்றால், இதன் வீடியோவின் மூலம் ஒரு நிமிடத்திற்கு 25 ஃப்ரேம்கள் கொடுக்க முடியும்.

ஜிடி-470 மாடலில் உள்ள மீடியாப் ப்ளேயர் ஆடியோ ஃபார்மெட்ஸிற்கு சப்போர்ட் செய்கிறது. இதில் உள்ள டபில்யூஏப்பி, ஜிப்பிஆர்எஸ், வைபை, எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்தின் மூலம் நெட் வசதியினை மின்னல் வேகத்தில் பெற முடியும். ஜிடி-470 மாடல் கார்ட் ஸ்லாஷ் வசதி கொண்டது.

இந்த வசதியினால் மைக்ரோஎஸ்டி/டி ஃப்லாஷ் கார்ட்ஸ் போன்றவைக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் வி2.0 புளூடூத் வசதியும் உள்ளது. இதன் மூலம் எந்த தகவல்களையும் சிறந்த முறையில் பரிமாரிக் கொள்ளலாம். இதில் 1000 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 3.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 200 மணி நேரம் ஸ்டான் பை டைம் மட்டுமே வழங்க முடியும். இந்த புதிய மாடல் வெறும் 2,800 விலையில் கிடைக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot