புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்: பீட்டெல் அறிமுகம்

பீட்டெல் பிராண்டு மொபைல்போன்கள் மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை பீட்டெல் விரைவில் அறிமுகம் செய்கிறது.
தீபாவளி பண்டிகையின்போது அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கொண்டதாக வருகிறது.
இதுகுறித்து பீட்டெல் தலைமை செயல் அதிகாரி வினோத் ஷானி கூறுகையில்," புதிய ஸ்மார்ட்போன் மற்றும் எல்டிஇ சாதனத்தை எங்களது எஞ்சினியர்கள் வடிவமைத்து வருகின்றனர்.
எங்களது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றும் வகையில் வரும் அக்டோபரில் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய மொபைல் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதும்," என்றார்.
இந்த புதிய ஸ்மார்ட்போன் மற்றும் எல்டிஇ சாதனத்தின் பிற விபரங்கள் குறித்து அவர் வாய்திறக்கவில்லை.
இருப்பினும், 3.2 இஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் 1ஜிகாஹெர்ட்ஸ் ஸ்நாப்ட்ராகன் பிராசஸருடன் இந்த போன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர, கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும்.
நடுத்தட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ.9,000 என்ற விலையில் இந்த புதிய போனை பீட்டெல் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications