3டி கேமிங் தொழில் நுட்பத்துடன் ஒரு பட்ஜெட் மொபைல்!

இந்த மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும் தகவல்களை துல்லியமாக கொடுக்க உதவும். இந்த மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவும் சிறப்பான புகைப்படத்தினையும், வீயோ ரெக்கார்டிங் வசதியினையும் சிறப்பாக வழங்கும். 16ஜிபி வரை இதன் எக்ஸ்டர்னல் மெமரி வசதி உள்ளது. இதனால் வேண்டிய தகவல்களை ஸ்டோர் செய்யலாம். ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மல்டி ப்ளேயர் மியூசிக், ஆடியோ ரெக்கார்டிங் போன்ற வசதிகளையும் வாடிக்கையாளர்கள் இந்த மொபைலில் பயன்படுத்த முடியும். குறைந்த விலை கொண்ட மொபைல் என்றாலும் இந்த பேட்டரி எல்ஐ-அயான் 1,100 எம்ஏஎச் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் கொண்ட இந்த பேட்டரி நிச்சயம் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியினை வழங்கும் என்று தாராளமாக கூறலாம்.
மெசன்ஜர் சர்வீஸ் மற்றும் 3டி கேம் தொழில் நுட்பத்திற்கும் இந்த மொபைல் சுலபமாக சப்போர்ட் செய்கிறது. இந்த பீட்டல் ஜிடி-777 மொபைல் ரூ.5,500 விலையில் இந்திய மொபைல் மார்கெட்டில் எளிதாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications