காஸ்ட்லி போன்களுக்கு கும்மாங்குத்து.. இவ்ளோ கம்மி விலைக்கு கர்வ்டு டிஸ்பிளே, 16GB ரேம், 66W சார்ஜிங்-ஆ!
பெரிய டிஸ்பிளே.. அதுவும் ஃபுல்எச்டி பிளஸ் கர்வ்டு அமோஎல்இடி உடன்! குவாட் கேமரா செட்டப் .. அதுவும் 50எம்பி மெயின் கேமராவுடன்! போதுமான பேட்டரித்திறன்.. அதுவும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன்! இப்படியான அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும்?
"கண்டிப்பாக ரூ.30,000க்கும் மேலான பட்ஜெட்டில் வரும் சைனீஸ் ஸ்மார்ட்போனாகத்தான் இருக்கும்!" என்று நீங்கள் நினைத்தால்.. அது முற்றுலும் தவறு. ஏனென்றால் நாம் இங்கே பேசப்போகும் ஸ்மார்ட்போன் ரூ,20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் இந்திய நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாகும்.

நாம் இங்கே பேசுவது இந்திய பிராண்ட் ஆன லாவாவின் அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிரீமியம் அம்சங்களை காஸ்ட்லியான விலைக்கு வழங்கும் சீன போன்களை காலி செய்யும் நோக்கத்தின்கீழ் வெளியான இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது; அதுவும் ரூ.2000 ஆஃபர் விலையில்!
அறிமுகமான நாளில் இருந்து.. எப்போதெல்லாம் விற்பனைக்கு வருகிறதோ.. அப்போதெலாம் அவுட் ஆஃப் ஸ்டாக் (Out of Stock) ஆகும்படியாக.. லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை தூள் பறக்கிறது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லாவாவின் கூற்றுப்படி, அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது செப்.5 காலை 10 மணிக்கு அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக மீண்டும் விற்பனைக்கு வரும். இந்த விற்பனையை இன்னும் சுவாரஸ்யமாக்க எச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ 2,000 என்கிற தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடியில் கீழ் ரூ.21,999 க்கு வாங்க கிடைத்த அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது கர்வ்டு டிஸ்பிளே டிசைன், குவாட் ரியர் கேமரா செட்டப், 5ஜி கனெக்டிவிட்டி, 66W பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும்!
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது எஃப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன் (FHD+ Resolution) உடனான 6.78 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சுவாரசியமாக இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் (In-display Finger Print Sensor) கொண்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 Chipset) மூலம் இயக்கப்படும் லாவா அக்னி 2 5ஜி மண்டலத்து 8ஜிபி வழக்கமான ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் (8GB RAM + 8GB Virtual RAM) உடன் வருகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256ஜிபி மெமரி உடன் வருகிறது.
தெர்மல் மேனேஜ்மென்ட்டிற்கான வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor chamber cooling system) உடன் வரும் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா செட்டப் (Quad Rear Camera Setup) உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.
எல்லாவற்றை விட முக்கியமாக, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 14 மற்றும் 15 ஓஎஸ்-க்கான அப்டேட்கள் (Android 14 and 15 OS Update) மற்றும் 3 வருட காலத்திற்கு காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்கள் (Quarterly security updates) கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 66W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது; ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








