முதல்ல 1 லட்சம்.. இப்போ எத்தனை லட்சமோ.. OFFER விலையில் மீண்டும் CMF Phone 1 விற்பனை!
சிஎம்எப் போன் 1 ஆனது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 1-ஐ போலவே "பல்பு வாங்கும்" என்று நினைத்தவர்கள் தான் பல்பு வாங்கி உள்ளனர். ஏனென்றால் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை தொடங்கிய வெறும் 3 மணி நேரத்தில் 1 லட்சம் யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று (ஜூலை 17) நடக்கவுள்ளது. சுவாரசியமாக முதல் விற்பனையின் போது கிடைத்த அதே சலுகை இன்றும் கிடைக்கும். அதென்ன சலுகை? இந்த போனின் விலை என்ன? இதோ விவரங்கள்:
அசல் விலை VS ஆபர் விலை: சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ். பேஸிக் 6ஜிபி ரேம் ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.15,999 ஆகும்; 8ஜிபி ரேம் ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.17,999 ஆகும்.

இருப்பினும் விற்பனை சலுகையின் ஒரு பகுதியாக சிஎம்எப் போன் 1 மீது ரூ.1000 வங்கி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பெற உங்களிடம் ஆக்சிஸ் பேங்க் கார்டு இருக்க வேண்டும். இதன்கீழ் 6ஜிபி ரேம் ஆப்ஷனின் விலையை ரூ.14,999 ஆகவும், 8ஜிபி ரேம் ஆப்ஷனின் விலையை ரூ.16,999 ஆகவும் குறைக்க முடியும்.
முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் சிஎம்எப் போன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 மூலம் இயக்குகிறது. இதற்கு 2 வருட மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் அமோஎல்இடி எல்டிபிஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி சிப்செட் உடன் வருகிறது. ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, சிஎம்எப் போன் 1 ஆனது எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2எக்ஸ் ஜூமிங் ஆதரவு போர்ட்ரெய்ட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை,. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் பேட்டரி லைஃப்பை வழங்கும். வெறும் 20 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 2டிபி வரை மெமரி விரிவாக்கம், 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஆப்டிகல் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங் போன்றவைகளை கொண்டுள்ளது.
சிஎம்எப் ஸ்மார்ட்போன் ஆனது பல்வேறு அக்ஸசெரீஸ்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிஎம்எப் போன் 1-க்கான கேஸ் ரூ.1,499 க்கும், ஸ்டாண்ட் ரூ.799 க்கும், லேன்யார்ட் கேபிளுடன் சேர்த்து ரூ.799 க்கும், கார்டு கேஸ் ரூ.799 க்கும் வாங்க கிடைக்கும். இன்னொரு விஷயம் சிஎம்எப் போன் 1 ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இடம்பெறாது. ஆக இந்நிறுவனத்தின் 33W சார்ஜரை வாங்க விரும்பினால் ரூ.1299 பணம் செலுத்தி தனியாகத்தான் வாங்க வேண்டும்!


Click it and Unblock the Notifications








