4ஜி யுத்தம்: நோக்கியாவின் 8110 மாடலுக்கு சவால் விடும் இந்திய நிறுவனம்.!

நோக்கிய 8110 மாடலில் KaiOS ஓஎஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது லீனக்ஸ்-இல் இருந்து வந்த புதிய வகை ஓஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

|

நோக்கியா தயாரிப்புகளின் விற்பனை உரிமை பெற்ற HMD குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியாவின் புதிய மாடலான நோக்கியா 8110 என்ற மாடலை அறிமுகம் செய்தது. ஸ்லைடர் மாடலில் உருவாக்கப்பட்டிருந்த இந்த மாடல் 4G தன்மையுடன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றது. மேட்ரிக்ஸ் திரைப்படத்தை பார்த்துதான் இந்த மாடல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, மைக்ரோமேக்ஸ் பாரத் 1 என்ற மாடல் உள்பட பல 4G மாடலுடன் போட்டியிடுகிறது.

4ஜி யுத்தம்: நோக்கியாவின் 8110 மாடலுக்கு சவால் விடும் இந்திய நிறுவனம்!

இந்த நோக்கியா 8110 மாடல் போன் பழைய ஸ்லைடர் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசிக் போன் மாடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த போனின் ஸ்லைடரில் கீபேட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பட்டனை அழுத்தி ஸ்லைடரை ஓப்பன் செய்து நீங்கள் அழைப்பில் பேசலாம். நோக்கியா 8110 மாடலின் டிஸ்ப்ளே 2.45 இன்ச் QVGA மற்றும் 240/320 பிக்சல் ரெசலூசன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் வாழைப்பழ மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும்.

மைக்ரோமேக்ஸ் பாரத் 1

மைக்ரோமேக்ஸ் பாரத் 1

இந்த மாடலுடன் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடலை ஒப்பிடும்போது கூடுதல் வசதியுடன் தென்படுகிறது. இந்த மாடலின் 2.45 இன்ச் கலர் டிஸ்ப்ளே மற்றும் கீபேட் முன்பக்கத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மைக்ரோமேக்ஸ் அதிக தரத்துடன் உள்ளது. மேலும் பாரத் 1 மாடல் மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5மிமீ ஹெட்போன் மற்றும் எல்.ஈ.டி டார்ச் வசதியுடன் உள்ளது.

 நோக்கியா 8110:

நோக்கியா 8110:

நோக்கியா 8110 4G மாடல் போனில் 1.1Ghz டூயல் கோர் குவால்காம் 205 பிராஸசர் உள்ளது. மேலும் இதில் 12MB ரேம் வசதி உண்டு. மேலும் இந்த மாடலில் 4GB இண்டர்னல் ஸ்டோரேஜும், கூடுதல் ஸ்டோரேஜ் பெற்றுக்கொள்ள மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் உண்டு. இந்த மாடலில் 2MP பின்பக்க கேமிரா மற்றும் எல்.ஈ.டி பிளாஷ் வசதி உண்டு. பேட்டரியின் சக்தி 1500mAh வகையிலும், 25 மணி நேரம் சார்ஜ் நிற்கும் வகையிலும் 9.30 மணிநேரம் பேசும் வகையிலும் உள்ளது.

குவால்கோம்:

குவால்கோம்:

இதேபோல் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடலில் குவால்கோம் 205 பிராஸசர் மற்றும் 512MB ரேம், 4GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்கள் உண்டு. அதிக ஸ்டோரேஜ் தேவைப்பட்டால் 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த மாடலின் கேமிரா 2MP அளவிலும் உள்ளது. இந்த மாடலின் பேட்டரி 2000mAh என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்:

ஃபேஸ்புக்:

அதேபோல் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடல் ஆண்ட்ராய்டு வகையை சேர்ந்தது. இந்த மாடலின் மற்ற அம்சங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற வசதிகளுடன் தான் இந்த மாடல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரத் 1 மாடலும் டூயல் சிம், 4G சப்போர்ட் ஆகியவை உண்டு. மேலும் வைபை, வைபை ஹாட்ஸ்பாட், யூஎஸ்பி டெதரிங், புளூடூத், ஜிபிஎஸ் ஆகிய வசதிகள் இந்த மாடலில் உண்டு

 விலை:

விலை:

நோக்கியா 8110 மாடல் இந்திய ரூபாயில் ரூ.6000 என்ற விலையில் கிடைக்கும். இன்னும் இந்த போனின் விலை இந்தியாவில் குறைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடலின் விலை ரூ.2200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 எந்த மாடல் சிறந்தது?

எந்த மாடல் சிறந்தது?

இரண்டு மாடல்களிலும் ஹார்ட்வேர் உள்ளிட்ட அம்சங்கள் சிறந்து விளங்கினாலும் டிசைனை பொருத்தவரையில் நோக்கியா மாடல் சிறந்ததாகவும், இந்த தலைமுறையினர்களூக்கு ஏற்ற KaiOS இருப்பதால் இந்த மாடல் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் செல்பி வசதி மற்றும் குறைவான விலை என்ற பாசிட்டிவ் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடலுக்கு உண்டு. மொத்தத்தில் நோக்கியா 8110 மாடல் இந்தியாவில் இன்னும் விலையை குறைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும்

Best Mobiles in India

English summary
Battle of 4G Feature Phones Micromax Bharat 1 Has a New Contender in the Form of Nokia 8110 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X