லூமியா 800 மொபைல் பேட்டரியில் கோளாறு: சரிசெய்யுமா நோக்கியா!

அனைத்து வகையிலும் சிறந்த தொழில் நுட்பத்தினை கொண்டிருக்கும் இந்த நோக்கியா லுமியா-800 மொபைல் பேட்டரி விஷயத்தில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. லுமியா-800 மொபைல் அமெரிக்காவில் வெளியிடபட்டது.
அமெரிக்க வாடிக்கையாளர்கள் லுமியா-800 மொபைல் பேட்டரியில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறிகின்றனர். இரவு முழுவதும் சார்ஜ் செய்தாலும், சார்ஜ் செய்த அளவு பேட்டரியின் ஆற்றல் நீடிப்பதில்லை என்றும், தானாகவே ஸ்விட்ச் ஆப் ஆகிவிடுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதனால் நோக்கியா லுமியா-800 மொபைல் இந்தியாவில் வெளியிடுவதற்கும் முன்பு இது போன்ற குறைபாடுகளை சரி செய்ய முடிவு செய்துள்ளது.
ஆனால் இப்பொழுது இருக்கும் இந்த நோக்கியா லுமியா-800 மொபைல் 7720 வெர்ஷன் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டது. இந்த மொபைல் 3.7 இஞ்ச் அகன்ற அமோல்டு திரையை கொண்டுள்ளது.
இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் இருப்பதால் அழகாக எடுக்க முடிகின்ற புகைப்படத்தையும், வீடியோவினையும் இந்த அகன்ற திரை மூலம் நன்கு பார்த்து ரசிக்கலாம்.
நோக்கியா லுமியா-800 மொபைல் இன்னும் இந்திய சந்தைக்கு வரவில்லை. இந்த மொபைல் ரூ.30,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த நோக்கியா லூமியா மொபைல் இந்திய சந்தைக்கு வருகை தரும்.
ஆனால் அப்படி வருகையில் இதில் பேட்டரி குறைபாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் நோக்கியா வாடிக்கையாளர்கள் இன்னும் இந்த மொபைலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications