Home
Mobile

வாடிக்கையாளர்களை அலுத்து போக வைத்த சாம்சங்!

By Super

வாடிக்கையாளர்களை அலுத்து போக வைத்த சாம்சங்!
வாடிக்கையாளர்கள் மத்தியில் அலையடிக்க செய்த சாம்சங் வேவ் வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு புதிய படா 2.0வெர்ஷன் அப்டேட் வசதி தரப்படும் என்று சாம்சங் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது இந்த அப்டேட் வசதியை தருவதற்கு மேலும் தாமதப்படுத்த சாம்சங் முடிவு செய்திருப்பதாக வந்த தகவல் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் வேவ் வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு படா 2.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அந்த அப்டேஷன் வசதியை வரும் மார்ச் மாதத்திற்கு பின் வழங்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பெற வாடிக்கையாளர்கள் இன்னும் சிறிது காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டே வேவ்-3 ஸ்மார்ட்போனுக்கு புதிய படா ஓஎஸ் அப்டேட் வசதியை வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்திருந்தது.

ஆனால், இதுவரை இந்த அப்டேஷன் வசதியை கொடுப்பது பற்றி சாம்சங் வாய் திறக்க வில்லை. இந்த நிலையில்,

ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புதிய படா ஓஎஸ் அப்டேட் வசதியை கொடுப்பது குறித்து சாம்சங் அதிகார பூர்வமாக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இருப்பினும், வரும் மார்ச் மாதத்திற்கு பிறகு படா ஆப்பரேட்டிங் அப்டேஷன் வசதியை துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சாம்சங் வேவ்-3 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள், ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படா 2.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை பெற இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X