இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ணுற வேலையா? அதுவும் தீபவாளி நேரம் பார்த்து!

|

ஆப்பிள் நிறுவனத்தின் (Apple) சமீபத்திய நடவடிக்கை ஒன்று பட்ஜெட் வாசிகளின் வயிற்று எரிச்சல்களையும், சாபங்களை வாங்கிக்கட்டி கொள்கிறது என்றே கூறலாம்!

ஆப்பிள் நிறுவனம் அப்படி என்ன செய்தது? பட்ஜெட் வாசிகள் "கொந்தளிக்கும்" அளவிற்கு என்ன நடந்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரொம்ப நாள் கனவு சார்.. ஆசை சார்!

ரொம்ப நாள் கனவு சார்.. ஆசை சார்!

சந்தேகத்திற்கு இடமின்றி 100 க்கு 90 பேருக்கு, ஆப்பிள் ஐபோன் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற ஆசை; கனவு இருக்கும்!

அந்த கனவிற்கும், ஆசைக்கும் இடையில் "அணை கட்டி" உட்கார்ந்து இருப்பது - பட்ஜெட் தான்! அதாவது ஐபோன்களின் பிரீமியம் விலை நிர்ணயம்!

இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

புதிய அறிவிப்பு!

புதிய அறிவிப்பு!

வெறும் ரூ.6000 க்கு நல்ல ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கும் இதே நாட்டில், பல ஆயிரங்களை செலவழித்தால் தான் ஒரு புதிய ஐபோன் வாங்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து, புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஒவ்வொருவரின் "ஐபோன் கனவும்" சுக்குநூறாக உடைந்து போகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

டக்குனு ரூ.6000!

டக்குனு ரூ.6000!

"ரூ.70,000 க்கும் மற்றும் ரூ,.80,000 க்கும் வாங்க கிடைக்கும் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 மாடல்களை தான் வாங்க முடியவில்லை.. குறைந்தது பட்ஜெட் விலையில்.. ஒரு SE மாடலையாவது வாங்கலாம்!" என்கிற ஐடியா உங்களிடம் இருந்தால்.. உங்கள் மனதை தேற்றிக்கொள்ளுங்கள்!

ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் அதன் பிரபலமான SE மாடல் ஒன்றின் விலையை "ஒரே அடியாக" ரூ.6,000 உயர்த்தி உள்ளது.

இந்த தீபாவளி முடிவதற்குள் Google-ல் இந்த தீபாவளி முடிவதற்குள் Google-ல் "இதை" டைப் செய்தால்.. ஒரு அதிசயம் நடக்கும்!

அதென்ன மாடல்?

அதென்ன மாடல்?

அது ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) ஆகும், இது ஐபோன் எஸ்இ 2022 (iPhone SE 2022) என்றும் அறியப்படுகிறது. இனிமேல் இதை ஆப்பிளின் "பட்ஜெட் விலை" ஐபோன் என்று கூறவே முடியாது.

ஏனென்றால் இந்த ஐபோன் மாடலை வாங்க, நீங்கள் இப்போது ஒரு பெரும் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

பழைய விலை VS புதிய விலை:

பழைய விலை VS புதிய விலை:

கடந்த மார்ச் மாதம் அறிமுகமான ஐபோன் எஸ்இ 3 (அல்லது ஐபோன் எஸ்இ 2022) ஆனது இந்தியாவில் ரூ.43,900 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இதன் மீது ரூ.6,000 என்கிற விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனிமேல், இதன் புதிய விலை ரூ.49,900 ஆகும்.

அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் "இந்த போன்கள்" எல்லாமே குப்பைக்கு போகும்!

அதிகபட்சம் ரூ.64,900 ஆகும்!

அதிகபட்சம் ரூ.64,900 ஆகும்!

தற்போது ஆப்பிள் இணையதளத்தின்படி, iPhone SE 3 மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 49,900 ஆகும்.

அதே நேரத்தில் 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 54,900 என்றும், 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.64,900 என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான Flipkart-இல் ஐபோன் SE 3 மாடலின் 64GB ஸ்டோரேஜ் ஆனது ரூ.47,990 க்கு வாங்க கிடைக்கிறது!

ரூ.50,000 பட்ஜெட்டிற்கு iPhone SE 3 வொர்த்-ஆ?

ரூ.50,000 பட்ஜெட்டிற்கு iPhone SE 3 வொர்த்-ஆ?

ஐபோன் எஸ்இ 3 மீதான விலை உயர்வை வேண்டுமானால் நாம் விமர்சனம் செய்யலாம். ஆனால் ஐபோன் எஸ்இ 3-ஐ நம்மால் விமர்சனம் செய்ய முடியாது; ஏனென்றால் அது பேக் செய்யும் அம்சங்கள் அப்படி!

எப்படி பார்த்தாலும், ரூ.50,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஐபோன் எஸ்இ 3-க்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும்!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

அப்படி என்ன அம்சங்களை கொண்டுள்ளது?

அப்படி என்ன அம்சங்களை கொண்டுள்ளது?

- 1334x750 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 4.7 இன்ச் எச்டி ரெடினா டிஸ்ப்ளே
- 4ஜிபி வரை ரேம்
- A16 பயோனிக் சிப்செட்
- 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 12MP ரியர் கேமரா
- 7MP செல்பீ கேமரா

ஆக.. ஒரு குறையும் இல்லையா என்று கேட்டால்?

ஆக.. ஒரு குறையும் இல்லையா என்று கேட்டால்?

அதெப்படி இருக்கும்! ஆப்பிள் ஐபோன் ஆக இருந்தாலும் சில குறைகள் இருக்கத்தானே செய்யும்.அப்படியாக ஐபோன் எஸ்இ 3 மாடலின் டிசைன் - கொஞ்சம் சொதப்பலாகவே உள்ளது.

ஏனென்றால், இது பழைய ஐபோன் 8 சீரீஸின் டிசைனை நினைவூட்டும் வண்ணம், ஹோம் பட்டனில் "உட்பொதிக்கப்பட்ட" ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது.

கடைசியாக, இந்த டிசைன் iPhone 8 சீரீஸ்-க்கு பிறகு வேறு எந்த மாடலிலும் இடம்பெறவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Photo Courtesy: Apple

Best Mobiles in India

English summary
Bad News For Apple Fans in India iPhone SE 3 aka iPhone SE 2022 Gets Rs 6000 Price Hike

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X