இப்படிதான் மொபைல் பேசணும்ங்க...!

Written By:

இன்று மொபைல் பயன்படுத்தும் பலர் அதை எப்படி பயன்படுத்துவது எங்கே பயன்படுத்துவது போன்ற பொது அறிவு சிறிதும் இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

பஸ்ஸில் நாம் நல்லா தூங்கிக் கொண்டிருப்போம் அப்போதான் ஒருவர் உரக்க பேசிக்கொண்டிருப்பார் நமக்கு தூக்கம் கலைந்தததும் வரும் பாருங்க கோவம்.

இந்தமாதிரி நாம் மற்றவற்றை குறை கூறினாலும் நாமும் தில இடங்களில் இதை கடைப்பிடிக்க மறந்து விடுகின்றோம் இதோ அந்த தருணங்களை நீங்களே பாருங்கள்.

ஏற்கனவே மிகச் சத்தமாக உள்ள இடத்தில் உள்ளீர்களா? அப்படியானால் உங்களுக்கு வரும் போன் அழைப்பை ஒத்தி போடுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்னும் அதிகமாக உரக்கப் பேச வேண்டியதிருக்கும். அப்போது மற்றவர்கள் உங்களை வித்தியாச ஜந்துவைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

உணர்சசி பூர்வமான, ரகசியமான உரையாடல்களை, மற்றவர்கள் கேட்கும் நிலையில் இருக்கையில் அதனைத் தவிர்க்கவும்; இது உங்களை அழைப்பவருக்கு செய்திடும் மரியாதை ஆகும்.

அடுத்தவருடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கையில் உங்களுக்கு வரும் மொபைல் அழைப்பினை இருவரும் எதிர்பார்த்தாலொழிய பேச வேண்டாம்.

வர்த்தக ரீதியிலான, உங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகையில் மொபைல் போனை ஆப் செய்துவிடலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இப்படிதான் மொபைல் பேசணும்ங்க...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அவசர அழைப்பை எதிர்பார்க்கிறீர்களா! அப்படியானால் உங்களுடன் இருப்பவர்களிடம், நீங்கள் அவசர அழைப்பு ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறி வைக்கவும். அப்போதுதான் அந்த அழைப்பு வருகையில், பிறர் மனம் புண்படாத வகையில் பேசலாம். அதுவும் அவர்கள் இல்லாத இடத்திற்குச் சென்று ஒதுங்கிப் பேசுவது நல்லது.

போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுவது மிக மிக ஆபத்தானது. விபத்துக்களில் பெரும்பாலானவை இது போன்ற "மொபைல் டிரைவர்களால்" தான் ஏற்படுகிறது என்று அறியப்பட்டுள்ளது.

நடந்து கொண்டு பேசுபவரா நீங்கள்! ஆஹா! இது பயங்கர ரிஸ்க் ஆன செயலாகும். பல வேளைகளில் இது விபத்துக்களில் முடிந்திருக்கிறது. ரயில்வே ட்ராக்குகளைக் கடக்கையில், சாலைகளில் நடந்து எதிர்முனைக்குச் செல்கையில், மொபைலில் பேசிக் கொண்டு சென்று விபத்துக்குள்ளானோர் மிக அதிகம்.

புளுடூத் சாதனத்தை காதில் செருகி உள்ளீர்களா! அதில் மின்னும் நீல நிற சிறிய எல்.இ.டி. விளக்கு மற்றவர்களின் கவனத்தைத் திருப்பும். மேலும் நீங்கள் உங்கள் எதிரில் உள்ளவர்கள் பேசுவதைக் கவனத் துடன் கேட்கவில்லை என்றும் மற்றவர்கள் எண்ணலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot