ஒன்பிளஸ் 7, 7 ப்ரோ உடன் ஜியோ வழங்கும் ரூ.9,300 மதிப்புள்ள சலுகைகள்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று தனது புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்களுக்காகக் கூடுதல் சிறப்புச் சலுகையை ஒன்பிளஸ் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

ரூ.5,400க்கான கேஷ் பேக் சலுகை

ரூ.5,400க்கான கேஷ் பேக் சலுகை

இந்த சலுகையின் கீழ், ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வாங்கும் பயனருக்கு ரூ.5,400க்கான கேஷ் பேக் சலுகை ரூ.299 முதல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடன் வழங்கப்படுகிறது. இந்த ரூ.150க்கான கேஷ் பேக் சலுகை 36 வவுச்சர்களாக மை ஜியோ ஆப் மூலம் வழங்கப்படும்.

மே 19 ஆம் தேதி முதல் சலுகை

மே 19 ஆம் தேதி முதல் சலுகை

ஜியோ பிரத்தியேகமாக வழங்கும் இந்த சலுகையில் ஒன்பிளஸ் 7 சீரிஸ் பயனர்களுக்கு ரூ.299 திட்டம் வெறும் ரூ.150 என்ற சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அனைத்து சலுகைகளும் மே 19 ஆம் தேதி முதல் www.jio.com, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மை ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் மை ஜியோ ஆப் மூலம் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ - 3ஜிபி 4ஜி டேட்டா

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ - 3ஜிபி 4ஜி டேட்டா

இதில் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ பயனர்களுக்குத் தினமும் 3ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் இலவச எஸ்.எம்.எஸ்களுடன் ஜியோவின் பிரத்தியேக சேவைகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ் மற்றும் பல சேவைகள் வழங்கப்படுகிறது.

ரூ.3,900 வரை கூடுதல் சலுகை

ரூ.3,900 வரை கூடுதல் சலுகை

இத்துடன் கூடுதல் பங்குதாரர் நன்மைகளாக ரூ.3,900 வரை சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஜூம்கார் வழங்கும் ரூ.2,000 அல்லது 20 சதவீத சலுகை, ஈஸ் மை ட்ரிப் வழங்கும் ரூ.1,500 அல்லது 15 சதவீத சலுகை மற்றும் சம்பக் வழங்கும் ரூ.350 சலுகை எனப் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
avail benefits worth rs 9 300 from jio on purchase of oneplus 7 7 pro

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X