Home
Mobile

போட்டோ குவாலிட்டி சும்மா பிச்சுக்கும்.. 2 வெயிட்டான கேமரா போன்கள்.. ஏப்ரல் 26ல் இந்திய அறிமுகம்!

நீங்கள் ஒரு மொபைல் போட்டோகிராஃபராக (Mobile Photographer) இருந்தால் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் 2 தரமான கேமரா போன்களை (Camera Phone) பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளில் என்ன ஸ்பெஷல்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

அதென்ன போன்கள்? நாம் இங்கே பேசுவது, ஏற்கனவே உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட, ஆனால் இந்தியாவிற்கு இன்னும் வராத 2 விவோ ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். அவைகள் விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிலாக்ஷிப் போன்களான (Flagship Phones) விவோ எக்ஸ்90 (Vivo X90) மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro).

2 வெயிட்டான கேமரா போன்கள்.. ஏப்ரல் 26ல் இந்திய அறிமுகம்!

கடந்த சில நாட்களாக "விரைவில் அறிமுகமாகும்" என்று டீஸ் செய்யப்பட்ட இந்த 2 விவோ போன்களும் வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில் "எக்ஸ்ட்ரீம் இமேஜினேஷனை கைப்பற்ற காத்திருங்கள்" என்றும் விவோ குறிப்பிட்டுள்ளது.

இந்த போன்களின் கேமராக்களில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த 2 போன்களுமே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ்80 சீரீஸின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களாகும். இந்த 2 விவோ போன்களுமே ஸெய்ஸ்-பவர்டு ரியர் கேமரா (Zeiss-powered Rear Camera) செட்டப்புடன் வருகின்றன, மேலும் விவோவின் இன்-ஹவுஸ் இமேஜ் சிப்செட் ஆன வி2-வை (V2) பேக் செய்கின்றன.

விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனானது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. அதில் 50எம்பி மெயின் கேமரா (எஃப்/1.75) + 12எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி போர்ட்ரெய்ட் கேமரா (எஃப்/1.6) உள்ளன. இந்த மூன்று சென்சார்களுமே ஸெய்ஸ் ஆப்டிக்ஸால் (Zeiss Optics) இயக்கப்படுகிறது.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்90 ப்ரோவிலும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பே உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா (சோனி IMX663 சென்சார் மற்றும் எஃப்/2.0) + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 50MP 50மிமீ IMX758 2X போர்ட்ரெய்ட் கேமரா (எஃப்/1.6) உள்ளன. மேலும் இந்த 2 போன்களுமே முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவுடன் வருகின்றன.

கேமராக்களை தவிர்த்து வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? இந்த இரண்டு விவோ போன்களுமே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி (FHD+ OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட்டுடன் வருகின்றன.

12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே விவோ நிறுவனத்தின் சொந்த ஓஎஸ் ஆன ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) கொண்டு இயங்குகிறது. கடைசியாக விவோ எக்ஸ்90 ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4810mAh பேட்டரியுடன் வருகிறது.

ஹைஎண்ட் மாடலான விவோ எக்ஸ்90 ப்ரோவில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு ஆகிய இரண்டுமே உள்ளது. அது 4870mAh பேட்டரியை பேக் செய்கிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை விவோ எக்ஸ்90 ரூ.42,000-ஐ சுற்றிய பட்ஜெட்டிலும், எக்ஸ்90 ப்ரோ ரூ.57,000-ஐ சுற்றிய பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
attention mobile photographers 2 best camera phones vivo x90 and x90 pro india launch on april 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X