புதிய அப்டேஷனுடன் மோட்டோ ஆட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
புதிய அப்டேஷனுடன் மோட்டோ ஆட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன்!
தரமான தொழில் நுட்பத்தின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்த மோட்டோரோலா நிறுவனம் இன்னொரு புதிய அப்டேஷன் வசதியுடன் வாடிக்கையாளர்களை அனுக உள்ளது. மோட்டோரோலா நிறுவனம் புதிய அப்டேஷன்

வசதியை தனது ஆட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போனில் வழங்க இருக்கிறது.

வி55.13.25 வெர்ஷன் சாப்ட்வேர் அப்டேஷனை ஆட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன் மூலம் வழங்க இருக்கிறது மோட்டோரோலா. இதில் நிறைய உயர்ந்த தொழில் நுட்பங்களை பெறலாம். இதன் முக்கிய அம்சமாக கூகுள் மியூசிக் அப்ளிக்கேஷனை கூறலாம். இந்த அப்ளிக்கேஷன் மூலம் ஆயிரக்கணக்கான பாடல்களை ஆன்லைனில் இருந்து

டவுன்லோட் செய்யலாம். இதனால் இசை உலகம் ஆட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் வசமாகும்.   இந்த அப்டேஷன் அவசரகால எச்சரிக்கை வசதியையும் வழங்கும். அதாவது புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் வருவதற்கு முன்னெச்சரிக்கை செய்யும் விதத்தில் இந்த எமர்ஜென்ஸி அலர்ட்ஸ் வசதியை ஏற்பாடு செய்துள்ளது மோட்டோரோலா.

இதில் உள்ள ஈசி அக்சஸ் ஐகான் மூலம் அமேசான் லைப்ரரியை பயன்படுத்தலாம். கூடிய விரைவில் ஆட்ரிக்ஸ் வாடிக்கையாளர்கள் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷனை பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot