Just In
- 20 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 31 min ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 2 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- 3 hrs ago TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
Don't Miss
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூப்பர் பட்ஜெட் விலையில் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1; ப்ளிப்கார்டில் இன்று விற்பனை.!
இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடலை தவிர்த்து, மீதமுள்ள இரண்டு சேமிப்பு மாடல்களும் பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் வழியாக, இன்று 12 மணிக்கு பிரத்யேகமாக வாங்க கிடைக்கும்.
அசுஸ் நிறுவனம் அதன் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்-ன் அடுத்த இந்திய விற்பனையானது, இன்று (ஜூன் 14) தொடங்கும் என்று கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடலை தவிர்த்து, மீதமுள்ள இரண்டு சேமிப்பு மாடல்களும் பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் வழியாக, இன்று 12 மணிக்கு பிரத்யேகமாக வாங்க கிடைக்கும்.
தைவான் நாட்டை சேர்ந்த அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1-ன் விலை நிர்ணயம் என்ன.? அம்சங்கள் என்ன.? இதை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா என்பதை பற்றி விரிவாக காண்போம்.
விலை நிர்ணயமானதும் மிக நியாமானதாகவே உள்ளது.!
தேவைகள் அதிகமாக இருப்பதால், இதுவொரு ஃப்ளாஷ் விற்பனையாக மேற்கொள்ளப்படுகிறது. இதே போன்று அடுத்த வாரமும் ஒரு பிளாஷ் விற்பனை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 மற்றும் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய மாற்றாக கருதப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமானதும் மிக நியாமானதாகவே உள்ளது
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.!?
சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.10,999/-க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.12,999/-க்கு வாங்க கிடைக்கும். இன்னும் வெளியாகாத இதன் 6 ஜிபி ரேம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட மாடல் ஆனது ரூ.14,999/-க்கு வெளியாகலாம்.
ஆசஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அம்சங்கள்.!
இந்திய மக்களின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை மனதிற்கொண்டு வெளியாகியுள்ள இந்த தயாரிப்பானது, வாடிக்கையாளரின் பணத்திற்கு ஏற்ற மதிப்பை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக உருவாகியுள்ளது. ஒரு 18: 9 விகிதம் மற்றும் 1080 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.99 அங்குல முழு HD+ டிஸ்பிலேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் மேலே ஒரு 2.5டி கர்வுடு கிளாஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
2டிபி வரை சேமிப்பக விரிவாக்கம்.!
சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1-ன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி திகழ்கிறது. இது சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் நேரடியாக மோதுகிறது. இந்த சிப்செட் 3ஜிபி/ 4ஜிபி ரேம் உடன் இணைந்து செயல்படுகிறது. 2டிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்குக்கான ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.!
இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சமாக ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு பி மற்றும் அண்ட்ராய்டு க்யூ மேம்படுத்தல்களும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒளியியலை பொறுத்தவரை, பின்பக்கத்தில் எப்/ 2.2 துளை மற்றும் PDAF உடனான 13 எம்பி முதன்மை சென்சார் உடனாக பொக்கே விளைவை சேர்க்க 5 எம்பி டெப்த் சென்சார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 எம்பி.!
முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 எம்பி கேமரா உள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் அக்ஸலரோமீட்டர், ஈ-காம்பஸ், ப்ராக்ஸிமிட்டி, அம்பியண்ட் லைட் சென்சார், க்ய்ரோஸ்கோப் மற்றும் பின்புற கைரேகை சென்சார் போன்ற அனைத்து அடிப்படை சென்சார்களையும் கொண்டுள்ளது.
ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி
பெயர் குறிப்பிடுவது போல், இந்த ஸ்மார்ட்போன் ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் ஒற்றை முழுமையான சார்ஜ் ஆணையு இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்க போதுமானதாக உள்ளது. இன்று 12 மணிக்கு தொடங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் நிச்சயமாக இன்றே வாங்க கிடைக்கும் என்பதில் உறுதி இல்லை. அந்நிலைப்பாட்டில், நீங்கள் அடுத்த விற்பனை வரை காத்திருக்க வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470