புதிய வசதியுடன் வெளிவரும் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.!
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மெட்டாலிக் பாடி வடிவமைப்பு
அசுஸ்போன்களுக்கு என்று அடிப்படை வடிவமைப்பு உள்ளது. ஆனால், தற்போது இந்த வடிவமைப்பை பல ஸ்மார்ட் போன்களில் பார்க்க முடிகிறது. இந்த புதிய போனில் பாதுகாப்பான வெளிப்புறம் உள்ளது. மெட்டாலிக் பாடி வடிவமைப்பு கொண்டது. செல்போனின் பின்புறத்தில் 2 ரியர் கேமரா செட் அப் உள்ளது.

விரல் ரேகை சென்சார்
பின்புறத்தின் மையப் பகுதியில் விரல் ரேகை சென்சார் உள்ளது. இடது புறத்தில் வால்யூம் கீயுடன் கூடிய பவர் பட்டன் உள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி செலுத்தும் வசதி கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் ஆசஸ் உயர்ந்து நிற்கிறது. 2160*1080பிக்சல் ரிசல்யூஷன் மற்றும் ஃஎப்ஹெச்டி 5.99 அங்குல ஸ்க்ரின் கொண்டதாகும்.

சூரிய வெளிச்சத்தில் கண் கூசாத டிஸ்ப்ளே
இரவு நேரத்தில் பளிச்சிடும் விளக்கு, ஏற்ற பிரைட்னஸ் வசதி கொண்டது. ஃபான்ட் அளவுல டிஸ்ப்ளே அளவு, திரையின் சத்தம் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ள பிரத்யேக வசதி உள்ளது. டிஸ்ப்ளே தரம் என்பது குறைச் சொல்ல முடியாத அளவில் உள்ளது. போட்டோக்கள் அனைத்து துல்லியமான காட்சியை அளிக்கிறது. சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேயை கண் கூசாமல் பார்க்க கூடிய அளவுக்கு அதிகப்படியான ப்ரைட்னஸ் வசதி உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
ஜில்லுனு இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் இதில் உள்ளது. கைரோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சந்தையில் கிடைக்கும் 2வது சிப் செட் இந்த மாடல் தான் என்பது சிறப்பம்சமாகும். 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. செல்போன் சூடாகும் என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை. எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும்.

பட்டய கிளப்பும் சவுண்ட் அழைப்பு
பட்டய கிளப்பும் சவுண்ட் அழைப்பு மற்றும் ஆடியோ தரம் சிறந்து விளங்குகிறது. இந்த மாடலில் செல்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் சவுண்ட் பிச்சு பெடலெடுக்கும். இதன் பயன்பாட்டு முறையை பலரும் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications