Home
Mobile

ப்ளிப்கார்டில் ரூ.10,999/-க்கு இன்று முதல் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.!

இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடலை தவிர்த்து, மீதமுள்ள இரண்டு சேமிப்பு மாடல்களும் பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் வழியாக, நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பின் கீழ் இன்று 12 மணி முதல் வாங்க கிடைக்கும்.

By Muthuraj

அசுஸ் நிறுவனம் அதன் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1-ன் இரண்டாவது இந்திய விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடலை தவிர்த்து, மீதமுள்ள இரண்டு சேமிப்பு மாடல்களும் பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் வழியாக, நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பின் கீழ் இன்று 12 மணி முதல் வாங்க கிடைக்கும்.

ரூ.10,999/-க்கு இன்று முதல் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.!

தைவான் நாட்டை சேர்ந்த அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1-ன் விலை நிர்ணயம் என்ன.? அம்சங்கள் என்ன.? இதை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா என்பதை பற்றி விரிவாக காண்போம்.

இரண்டு வண்ண வகைகளில்.?!

இரண்டு வண்ண வகைகளில்.?!

கடந்த ஜூன் 7 ஆம் தேதி அன்று ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையை சந்திந்த சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஆனது இரண்டு வண்ண வகைகளில் - சாம்பல் மற்றும் பிளாக் - வாங்க கிடைக்கிறது. இருந்தாலும் கூட, அறிமுகமான 3 சேமிப்பு மாடல்களில் இரண்டு மாடல்கள் மட்டுமே விற்பனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது 6 ஜிபி ரேம் வேரியண்ட் அறிமுகமாகவில்லை.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.!?

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.!?

பதிலாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாடல் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மாடல் வாங்க கிடைக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, அடிப்படை மாறுபாடானது ரூ.10,999/-க்கும் மற்றும் பிரீமியம் மாறுபாதானது ரூ.12,999/-க்கும் வாங்க கிடைக்கும். இன்னும் கிடைக்கப்பெறாத மூன்றாவது மாறுபாடு ஆனது ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மாடல் என்பதும், அதன் விலை நிர்ணயம் ரூ.14,999/- என்பதும் குறிப்பிடத் தக்கது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அம்சங்கள்.!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அம்சங்கள்.!

இந்திய மக்களின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை மனதிற்கொண்டு வெளியாகியுள்ள இந்த தயாரிப்பானது, வாடிக்கையாளரின் பணத்திற்கு ஏற்ற மதிப்பை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக உருவாகியுள்ளது. ஒரு 18: 9 விகிதம் மற்றும் 1080 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.99 அங்குல முழு HD+ டிஸ்பிலேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் மேலே ஒரு 2.5டி கர்வுடு கிளாஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

சேமிப்பக விரிவாக்கம்.!

சேமிப்பக விரிவாக்கம்.!

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1-ன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி திகழ்கிறது. இது சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் நேரடியாக மோதுகிறது. இந்த சிப்செட் 3ஜிபி/ 4ஜிபி ரேம் உடன் இணைந்து செயல்படுகிறது. சேமிப்பக விரிவாக்கத்திற்குக்கான ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.!

இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சமாக ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு பி மற்றும் அண்ட்ராய்டு க்யூ மேம்படுத்தல்களும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒளியியலை பொறுத்தவரை, பின்பக்கத்தில் எப்/ 2.2 துளை மற்றும் PDAF உடனான 13 எம்பி முதன்மை சென்சார் உடனாக பொக்கே விளைவை சேர்க்க 5 எம்பி டெப்த் சென்சார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 எம்பி.!

செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 எம்பி.!

முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 எம்பி கேமரா உள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் அக்ஸலரோமீட்டர், ஈ-காம்பஸ், ப்ராக்ஸிமிட்டி, அம்பியண்ட் லைட் சென்சார், க்ய்ரோஸ்கோப் மற்றும் பின்புற கைரேகை சென்சார் போன்ற அனைத்து அடிப்படை சென்சார்களையும் கொண்டுள்ளது.

ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி

ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி

பெயர் குறிப்பிடுவது போல், இந்த ஸ்மார்ட்போன் ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் ஒற்றை முழுமையான சார்ஜ் ஆணையு இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்க போதுமானதாக உள்ளது. இன்று 12 மணிக்கு தொடங்க உள்ள சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் நிச்சயமாக இன்றே வாங்க கிடைக்கும் என்பதில் உறுதி இல்லை. அந்நிலைப்பாட்டில், நீங்கள் அடுத்த விற்பனை வரை காத்திருக்க வேண்டும். அது சார்ந்த தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் காத்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max Pro M1 Sale Today at 12 PM On Flipkart, Available With No Cost EMI Option. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X