Home
Mobile

5.99 டிஸ்பிளேவுடன் களமிறங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 : விமர்சனம்.!

அசுஸ் போன்களுக்கு என்று அடிப்படை வடிவமைப்பு உள்ளது. ஆனால், தற்போது இந்த வடிவமைப்பை பல ஸ்மார்ட் போன்களில் பார்க்க முடிகிறது.

By Vathimathi S

தைவான் நாட்டின் நிறுவனமான அசுஸ் புதிதாக ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 3 விதமான ஸ்டோரேஜ் வசதியுடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.10,999 ஆகும்.

 5.99 டிஸ்பிளேவுடன் களமிறங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 : விமர்சனம்.!

மெட்டாலிக் பாடி
அசுஸ்போன்களுக்கு என்று அடிப்படை வடிவமைப்பு உள்ளது. ஆனால், தற்போது இந்த வடிவமைப்பை பல ஸ்மார்ட் போன்களில் பார்க்க முடிகிறது. இந்த புதிய போனில் பாதுகாப்பான வெளிப்புறம் உள்ளது. மெட்டாலிக் பாடி வடிவமைப்பு கொண்டது. செல்போனின் பின்புறத்தில் 2 ரியர் கேமரா செட் அப் உள்ளது.

ரேகை சென்சார்
பின்புறத்தின் மையப் பகுதியில் விரல் ரேகை சென்சார் உள்ளது. இடது புறத்தில் வால்யூம் கீயுடன் கூடிய பவர் பட்டன் உள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி செலுத்தும் வசதி கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் ஆசஸ் உயர்ந்து நிற்கிறது. 2160*1080பிக்சல் ரிசல்யூஷன் மற்றும் ஃஎப்ஹெச்டி 5.99 அங்குல ஸ்க்ரின் கொண்டதாகும்.

 5.99 டிஸ்பிளேவுடன் களமிறங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 : விமர்சனம்.!

சூரிய வெளிச்சத்தில் கண் கூசாத டிஸ்ப்ளே
இரவு நேரத்தில் பளிச்சிடும் விளக்கு, ஏற்ற பிரைட்னஸ் வசதி கொண்டது. ஃபான்ட் அளவுல டிஸ்ப்ளே அளவு, திரையின் சத்தம் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ள பிரத்யேக வசதி உள்ளது. டிஸ்ப்ளே தரம் என்பது குறைச் சொல்ல முடியாத அளவில் உள்ளது. போட்டோக்கள் அனைத்து துல்லியமான காட்சியை அளிக்கிறது. சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேயை கண் கூசாமல் பார்க்க கூடிய அளவுக்கு அதிகப்படியான ப்ரைட்னஸ் வசதி உள்ளது.

ஜில்லுனு இருக்கும்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் இதில் உள்ளது. கைரோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சந்தையில் கிடைக்கும் 2வது சிப் செட் இந்த மாடல் தான் என்பது சிறப்பம்சமாகும். 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. செல்போன் சூடாகும் என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை. எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும்.

 5.99 டிஸ்பிளேவுடன் களமிறங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 : விமர்சனம்.!

பட்டய கிளப்பும் சவுண்ட்

அழைப்பு மற்றும் ஆடியோ தரம் சிறந்து விளங்குகிறது. இந்த மாடலில் செல்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் சவுண்ட் பிச்சு பெடலெடுக்கும். ஆந்த்ராய்டு 8.1 வெர்சன் கொண்டது. இதன் பயன்பாட்டு முறையை பலரும் பாராட்டியுள்ளனர்.

அச்சு அசல் மாறாத போட்டோக்கள்
கேமராவை பொறுத்தவரை 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் கேமரா உள்ளது. இது கண்களில் ஒத்திக் கொள்ள கூடிய வகையிலான போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது. முன்பகுதியில் 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா உள்ளது. ஸ்நான் டிராப் கேமரா ஆப் இன்டர்பேஸ் கொண்டது. இது பயன்படுத்த எளிமையாக இருக்கும். ஃபில்ட்டர்ஸ், பியூட்டிபிக்கேஷன் உள்ளிட்ட பல ஆழ்ந்த செட்டிங்ஸ் வசதிகள் உள்ளது. போட்டோவின் அனைத்து பகுதிகளிலும் கலர்கள் மிக சரியாக கிடைக்கும்.

 5.99 டிஸ்பிளேவுடன் களமிறங்கிய சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 : விமர்சனம்.!


சார்ஜ் பற்றிய கவலை வேண்டாம்

ஸ்மார்ட் போன்களில் பேட்டரி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு அதிகமாக செலவு செய்து ஸ்மார்ட் போன் வாங்கினாலும் சார்ஜ் நிக்கவில்லை என்றால் வாங்கியவர் வெறுப்படைய தான் நேரிடும். அந்த வகையில் பார்த்தால் இந்த மாடலில் 5000எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க இந்த திறன் போதுமானது.

இதர போன்கள் ஒரு நாளோ அல்லது சராசரியான பயன்படுத்தினாலே பேட்டரி லோ என்று வந்துவிடும். ஆனால் ஆசஸின் இந்த மாடல் பேட்டரி 2 நாட்கள் சார்ஜ் நிற்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் அழைப்புகள், இன்டர்நெட் பிரவுசிங், ஜிபிஎஸ் டிராக்கிங், நெட்பிக்சிங் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தங்கு தடையின்றி பயன்படுத்தலாம். ஒட்டுமொத்த பேட்டரியின் தன்மை திருப்தி அளிக்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max Pro M1 review: A star is born; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X