ரூ.336 விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விற்பனை.!
அசுஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலை இன்று பிளிப்கார்ட் இல் விற்பனையைத் துவங்குகிறது.

அசுஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலை இன்று பிளிப்கார்ட் இல் விற்பனையைத் துவங்குகிறது. அதீத சிறப்பம்சங்களுடன் குறைந்த விலையில் இந்த ஆண்டு வெளியாகும் சூப்பர் ஸ்மார்ட்போன் என்ற பெயரை அசுஸ் நிறுவனம் பெரும் என்பதில் சந்தேகமில்லை.
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் இன்று 12 மணிக்குத் தனது விற்பனையை பிலிப்க்ளார்ட்டில் துவங்குகிறது. சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1, 3 விதமான ஸ்டோரேஜ் வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
3ஜிபி ரேம் 32ஜிபி சேமிப்பு வேரியண்ட், 4ஜிபி ரேம் 64ஜிபி வேரியண்ட் மற்றும் 6ஜிபி ரேம் 64ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையைத் துவங்குகிறது.

ரூ.336 சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இன் துவக்க மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்புக் கொண்ட ஸ்மார்ட்போன் துவக்க விலையாக ரூ.10,999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது. முக்கிய குறிப்பாக ரூ.336 க்கு மாதாந்திர தவனைத் திட்டத்தில், இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்படி விற்பனையைத் துவங்கியுள்ளது அசுஸ் நிறுவனம்.

ரூ.432 சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அடுத்த அட்வான்ஸ் ஸ்டோரேஜ் மாடல் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் 64ஜிபி உள் சேமிப்புக் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ரூ.12,999 க்கு மாதாந்திர தவனை திட்டத்தில் ரூ.432 க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.

ரூ.499 சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1இன் 6ஜிபி ரேம் 64ஜிபி உள் சேமிப்பு வேரியண்ட் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ரூ.14,999 க்கு மாதாந்திர தவனை திட்டத்தில் ரூ.499 க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு:
- 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை
- 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்கம்
- 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா
- 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா
- 5000எம்ஏஹெச் பேட்டரி
- கைரேகை சென்சார், வைப்பை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் என இதர அம்சங்களுடன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.

பிளிப்கார்ட்
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் கிடைக்கிறது. நம்ப முடியாத ரூ.336 விலையில், இந்த ஸ்மார்ட்போன் வாங்க உடனடியாக பிளிப்கார்ட் செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications