Home
Mobile

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு புதிய அப்டேட்!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ வெளியிடத் தொடங்கியுள்ளது அந்நிறுவனம். விரைவில் அனைத்து சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு புதிய அப்டேட்!

சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 பின்புறத்தின் மையப் பகுதியில் விரல் ரேகை சென்சார் உள்ளது. இடது புறத்தில் வால்யூம் கீயுடன் கூடிய பவர் பட்டன் உள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி செலுத்தும் வசதி கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் ஆசஸ் உயர்ந்து நிற்கிறது. 2160*1080பிக்சல் ரிசல்யூஷன் மற்றும் ஃஎப்ஹெச்டி 5.99 அங்குல ஸ்க்ரின் கொண்டதாகும்.

இரவு நேரத்தில் பளிச்சிடும் விளக்கு, ஏற்ற பிரைட்னஸ் வசதி கொண்டது. ஃபான்ட் அளவுல டிஸ்ப்ளே அளவு, திரையின் சத்தம் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ள பிரத்யேக வசதி உள்ளது. டிஸ்ப்ளே தரம் என்பது குறைச் சொல்ல முடியாத அளவில் உள்ளது. போட்டோக்கள் அனைத்து துல்லியமான காட்சியை அளிக்கிறது. சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேயை கண் கூசாமல் பார்க்க கூடிய அளவுக்கு அதிகப்படியான ப்ரைட்னஸ் வசதி உள்ளது.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு புதிய அப்டேட்!

ஜில்லுனு இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் இதில் உள்ளது. கைரோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சந்தையில் கிடைக்கும் 2வது சிப் செட் இந்த மாடல் தான் என்பது சிறப்பம்சமாகும். 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. செல்போன் சூடாகும் என்ற பேச்சுக்கே இதில் இடமில்லை. எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் குளிர்ந்த
நிலையிலேயே இருக்கும்.

பட்டய கிளப்பும் சவுண்ட் அழைப்பு மற்றும் ஆடியோ தரம் சிறந்து விளங்குகிறது. இந்த மாடலில் செல்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் சவுண்ட் பிச்சு பெடலெடுக்கும். இதன் பயன்பாட்டு முறையை பலரும் பாராட்டியுள்ளனர்.

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு புதிய அப்டேட்!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விவரக்குறிப்பு:
- 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே 1080 பிக்சல் 18:9 விகித திரை
- 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலி
- 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் பின் கேமரா
- 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா
- 5000எம்ஏஹெச் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus Zenfone Max Pro M1 gets Android 10 Beta update in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X