6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.!
கேமராவை பொறுத்தவரை 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் கேமரா உள்ளது. இது கண்களில் ஒத்திக் கொள்ள கூடிய வகையிலான போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது.
இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிக வரவேற்ப்பு கிடைத்தள்ளது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் வரும் ஜூலை 26-ம் தேதி அன்று 6ஜிபி ரேம் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் இதற்குமுன்ப வந்த 3ஜிபி ரேம் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1சாதனத்தின் விலை ரூ.10,999-ஆக இருந்தது, அதன்பின்பு 4ஜிபி கொண்ட இக்கருவியின் விலை ரூ.12,999-ஆக இருந்தது. இப்போது வரும் 6ஜிபி கொண்ட
சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் விலை தெரிவிக்கப்படவில்லை. மேலும் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஷ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 636:
சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

அச்சு அசல் மாறாத போட்டோக்கள்
கேமராவை பொறுத்தவரை 13எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் கேமரா உள்ளது. இது கண்களில் ஒத்திக் கொள்ள கூடிய வகையிலான போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது. முன்பகுதியில் 8எம்பி கொண்ட செல்ஃபி கேமரா உள்ளது. ஸ்நான் டிராப் கேமரா ஆப் இன்டர்பேஸ் கொண்டது. இது பயன்படுத்த எளிமையாக இருக்கும். ஃபில்ட்டர்ஸ், பியூட்டிபிக்கேஷன் உள்ளிட்ட பல ஆழ்ந்த செட்டிங்ஸ் வசதிகள் உள்ளது. போட்டோவின் அனைத்து பகுதிகளிலும் கலர்கள் மிக சரியாக கிடைக்கும்.

சார்ஜ் பற்றிய கவலை வேண்டாம்
ஸ்மார்ட் போன்களில் பேட்டரி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு அதிகமாக செலவு செய்து ஸ்மார்ட் போன் வாங்கினாலும் சார்ஜ் நிக்கவில்லை என்றால் வாங்கியவர் வெறுப்படைய தான் நேரிடும். அந்த வகையில் பார்த்தால் இந்த மாடலில் 5000எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க இந்த திறன் போதுமானது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications