6ஜிபி ரேம் உடன் விற்பனைக்கு வந்த அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.!
அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நல்லவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நல்லவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6ஜிபி ரேம் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சாதனத்தின் விலை ரூ.14,999-ஆக இருக்கிறது, அதேபோன்று இதற்குமுன்பு வந்த 3ஜிபி ரேம் கொண்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1சாதனத்தின் விலை ரூ.10,999-ஆக இருந்தது, அதன்பின்பு 4ஜிபி கொண்ட இக்கருவியின் விலை ரூ.12,999-ஆக இருந்தது.

டிஸ்பிளே:
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஷ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 636:
சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டோ-கோர்
செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

16எம்பி கொண்ட செல்ஃபி கேமரா
அச்சு அசல் மாறாத போட்டோக்கள் கேமராவை பொறுத்தவரை 16எம்பி மற்றும் 5எம்பி திறன் கொண்ட டூயல் கேமரா உள்ளது. இது கண்களில் ஒத்திக் கொள்ள கூடிய வகையிலான போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது.
முன்பகுதியில்16எம்பி கொண்ட செல்ஃபி கேமரா உள்ளது. ஸ்நான் டிராப் கேமரா ஆப் இன்டர்பேஸ் கொண்டது. இது பயன்படுத்த எளிமையாக இருக்கும். ஃபில்ட்டர்ஸ், பியூட்டிபிக்கேஷன் உள்ளிட்ட பல ஆழ்ந்த செட்டிங்ஸ் வசதிகள் உள்ளது. போட்டோவின் அனைத்து பகுதிகளிலும் கலர்கள் மிக சரியாக கிடைக்கும்.

சார்ஜ் பற்றிய கவலை வேண்டாம்
ஸ்மார்ட் போன்களில் பேட்டரி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு அதிகமாக செலவு செய்து ஸ்மார்ட் போன் வாங்கினாலும் சார்ஜ் நிக்கவில்லை என்றால் வாங்கியவர் வெறுப்படைய தான் நேரிடும். அந்த வகையில் பார்த்தால் இந்த மாடலில் 5000எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க இந்த திறன் போதுமானது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications