Home
Mobile

டூயல் கேம்; பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ளஸ் (எம்1).!

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ளஸ் (எம்1) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் கிடைக்கும்தன்மை சார்ந்த எந்தவிதமான வார்த்தைகளும் இல்லை.

By Muthuraj

சீனாவில் அதன் முதல் பெஸல்லெஸ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் ஆன பெகசஸ் 4எஸ் சாதனத்தை அறிமுகப்படுத்திய பின்னர், அசுஸ் நிறுவனம் அதன் சென்போன் மேக்ஸ் ப்ளஸ் (எம்1) ஸ்மார்ட்போனை - 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளேவுடன் - வெளியிட்டது.

டூயல் கேம்; பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ளஸ் (எம்1)

இந்த புதிய கைபேசி ஒரு இரட்டை கேமரா அமைப்பையும் கொண்டுள்ளதென்பது அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவில் பட்டியலிடப்பட்டுள்ளது. தைவானிய உற்பத்தியாளரின் புதிய சாதனமான இந்த சென்போன் மேக்ஸ் மாதிரியானது ரஷ்ய சந்தையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய பின்னர், மற்ற பகுதிகளுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

5.7 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளே

5.7 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளே

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ளஸ் (எம்1) ஒரு முழு எச்டிப்ளஸ் (1080x2160 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 18: 9 விகிதம் கொண்ட 5.7 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இக்கருவி ஒரு மீடியா டெக் எம்டி6750டி செயலி உடனான 2 ஜிபி அல்லது ரேம் 3 ஜிபி உடன் இணைந்து இயங்குகிறது.

256ஜிபி வரை

256ஜிபி வரை

இரண்டு சேமிப்பு விருப்பங்களில் - 16 ஜிபி மற்றும் 32ஜிபி உள் சேமிப்பு - வெளிவரும் இக்கருவி, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரையிலான விரிவாக்கத்தை வழங்கும் ஒரு பிரத்யேக மைக்ரோ ஸ்லாட் கொண்டுள்ளது. மேலும் இந்த கைபேசியில் 4ஜி பிணைய அணுகல் மற்றும் இரட்டை சிம் ஆதரவும் உள்ளது.

4130எம்ஏஎச்

4130எம்ஏஎச்

இக்கருவி அதன் முந்தைய சென்போன் மேக்ஸ் மாதிரியைப் போலவே, ஒரு பாரிய பேட்டரித்திறனை கொண்டுள்ளது - 4130எம்ஏஎச் மற்றும் இது 3ஜி நெட்வொர்க்கில் 26 மணி நேர பேச்சு நேரத்தை அல்லது சிங்கிள் சார்ஜில் 13 மணிநேர வீடியோ பின்னணியை வழங்குமென நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

இந்த ஸ்மார்ட்போன் ப்ரீலோடட் அசுஸ் 'பவர்மாஸ்டர்' கொண்டு வருகிறது இதன் மூலம் சாதனத்தின் பேட்டரி ஆயுள் இரண்டு முறை அதிகரிக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான சென்யூஐ கொண்டு இயங்கும் இயக்கருவி விவோ வி7 மற்றும் எல்ஜி க்யூ6 ஸ்மார்ட்போன்களில் இருப்பதுபோன்றே பேஸ் டிடெக்ஷன் அம்சத்தினை உள்ளடக்கியுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், வைஃபை, ப்ளூடூத் 4.0, ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது. கூடுதலாக ஒரு கைரேகை ஸ்கேனர் அம்சமும் கொண்டுள்ளது. பிளாக் வேவ், அசூர் சில்வர் மற்றும் சன்னி கோல்டன் ஆகிய வண்ண விருப்பங்கள் வெளிவரும் இக்கருவி ஒரு உலோக வடிவமைப்பு கொண்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

16 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல்

16 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல்

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இக்கருவி 16 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் எண்ரச டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது இரட்டை கேமரா அமைப்பு ஒரு எப் / 2.0 துளை லென்ஸையும், 120 டிகிரி பரந்த கோண லென்ஸையும் கொண்டுள்ளன.

8 மெகாபிக்சல் கேமரா

8 மெகாபிக்சல் கேமரா

முன்பக்கம், எப் / 2.0 துளை லென்ஸ் கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. இதனுடன் முன்னரே நிறுவப்பட்ட - ஸ்கின் டோனிங், ஸ்மூத்திங், லைட்னிங், மற்றும் ஐ கரெக்ஷன் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளதால், மற்ற கருவிகள் வழங்கும் செல்பீக்களை விட சிறப்பான வெளியீடுகளை வழங்குமென்பதில் சந்தேகமில்லை.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ளஸ் (எம்1) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் கிடைக்கும்தன்மை சார்ந்த எந்தவிதமான வார்த்தைகளும் இல்லை. எனினும், ரஷ்ய தளமான ஹெல்பிக்ஸ்.ரு (Helpix.ru) அளித்துள்ள தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் நாட்டில் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Asus ZenFone Max Plus (M1) With 5.7-Inch 18:9 Display Launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X