பட்ஜெட் விலையில் வெளிவரும் ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1).!
மீடியாடெக் எம்டி6750டி ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது இந்த ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போன், மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சிஇஎஸ் 2018-நிகழ்ச்சியில் ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போனின் விலை வெளியிட்டுள்ளது ஆசுஸ் நிறுவனம், மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போன் பிப்ரவரியில் விற்பனைக்கு வரும். இது வெள்ளி மற்றும் டீப்சா பிளாக் வண்ண விருப்பங்கள் கொண்டுள்ளது
ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்த மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது.

ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1):
ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மீடியாடெக்:
மீடியாடெக் எம்டி6750டி ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது இந்த ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போன், மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விலை:
ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போனின் விலை 229டாலர்கள், இந்திய விலை மதிப்பில் ரூ.14,534-ஆக உள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி:
ஆசுஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1) ஸ்மார்ட்போனில் 4130எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, இணையம் போன்ற வசதிகளுக்கு மிகஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை 802.11, ப்ளூடூத் 4.0, ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி, 4ஜி எல்டி போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications