ரூ.10,000/- பட்ஜெட் கொண்டவர்களுக்கான சென்போன் லைவ்.!

|

அசுஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் சென்போன் லைவ் ஸ்மார்ட்போனை இன்று (புதன்கிழமை) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் முதலில் வெளியீடப்பட்ட இக்கருவி இந்தியாவில் ரூ.9,999/- என்ற விலை நிர்ணயம் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இன்று முதல் (புதன்கிழமையிலிருந்து) ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் இக்கருவி விற்பனை செய்யப்படும்.

அசுஸ் சென்போன் லைவ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக 'உலகின் முதல் நேரடி ஸ்ட்ரீமிங் அழகுபடுத்தும் தொழில்நுட்பம்' திகழ்கிறது. இந்த பியூட்டி லைவ் (BeautyLive) பயன்பாடு பயனர்களின் கறைகளை அகற்ற உதவுகிறது மற்றும் சமூக ஊடக தளங்களில் நேரடி ஸ்ட்ரீமிங் செய்யும் போதும் அழகுப்படுத்துகளில் உதவுகிறது.

டூல் மெம்ஸ் ஒலிவாங்கி

டூல் மெம்ஸ் ஒலிவாங்கி

மேலும் சிறந்த ஆடியோ செயல்திறனுக்காக டூல் மெம்ஸ் ஒலிவாங்கிகளை கொண்டுள்ள இக்கருவி தெளிவான குரல் தரத்தை உறுதி செய்கிறது மற்றும் சிறந்த ஆடியோ வெளிப்பாட்டிற்கான புதிய 5-மேக்னட் ஸ்பீக்கரும் கொண்டுள்ளது.

மார்ஷல்லோ

மார்ஷல்லோ

இரட்டை சிம் (நானோ + மைக்ரோ) ஆதரவு கொண்ட அஸ்ஸு சென்போன் லைவ் ஆனது (ZB501KL) ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோவை அடிப்படையாக கொண்ட சென்யூஐ 3.5 கொண்டு இயங்குகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5-அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவி கண் பாதுகாப்பிற்கான ப்ளூலைட் பில்டர் கொண்டுள்ளது 2 ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு க்வாட் கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் செயலி (குறிப்பிடப்படாத மாதிரி) மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் அசுஸ் சென்போன் லைவ் ஆனது ஒரு எப் / 2.0 துளை மற்றும் இரட்டை எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம், ஒரு 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது அது 1.4 மைக்ரான் பிக்சல் சென்சார், எப் / 2.2 துளை, 82 டிகிரி அகல கோணம் லென்ஸ், மற்றும் ஒரு மென்மையான லைட் எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது.

சேமிப்பு

சேமிப்பு

16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு கலப்பு இரட்டை சிம் அமைப்பில் உள்ளது. மேலும் 4ஜி வோல்ட்,வைஃபை, ப்ளூடூத் வி4.0, எப்எம் ரேடியோ மற்றும் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

2650எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ள இது 158.8 மணி நேரம் காத்திருப்பு நேரம், 24 மணி நேரம் 3ஜி பேச்சு நேரம் மற்றும் 17.1 மணிநேர வைஃபை உலாவுதல் நேரம் ஆகியவைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus ZenFone Live (ZB501KL) With Live Beautification Tech Launched at Rs. 9,999: Release Date, Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X