Home
Mobile

5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் லைவ் எல்1 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

அசுஸ் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்சமயம் அந்நிறுவனம் சென்போன் லைவ் எல்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் வரும் மே 17-ம் தேதி முதல் சென்போன் லைவ் எல்1 இந்தோனேஷியாவில் விற்பனைக்கு வரும் என அசுஸ் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் லைவ் எல்1 அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரோஸ் பிங்க், மிட்நைட் பிளாக் மற்றும் வைட் போன்ற நிறங்களில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அசுஸ் நிறுவனம் கூறியுள்ளது.

சென்போன் லைவ் எல்1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440x720பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சென்போன் லைவ் எல்1 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த லைவ் எல்1 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது,அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் லைவ் எல்1 அறிமுகம்.!

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

சென்போன் லைவ் எல்1 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு கோ செயலிகளான மேப்ஸ் கோ, கூகுள் கோ, ஃபைல்ஸ் கோ போன்ற செயலிகள் இலவசமாக இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Asus Zenfone Live L1 Android Go smartphone goes official; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X