ஏசஸ் சென்போன் சி ரூ.5,999க்கு வெளியிடப்பட்டது

Written By:

தாய்வான் செல்போன் நிறுவனமான ஏசஸ் புதிய வகை ஸ்மார்ட்போனான சென்ரோன் சி ZC451CG மாடலை இந்தியாவில் ரூ.5,999க்கு வெளியிட்டது.

ஏசஸ் சென்போன் சி ரூ.5,999க்கு வெளியிடப்பட்டது

தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், பிப்ரவரி 18 முதல் ஏசஸ் ப்ரெத்யேக கடைகளில் விற்பனையை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசஸ் சென்போன் சி ரூ.5,999க்கு வெளியிடப்பட்டது

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் FWVGA TN பேனல் டிஸ்ப்ளே, 480*854 பிக்ஸல் ரெசல்யூஷன் இருக்கின்றது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் Intel CloverTrail பிராசஸர் மற்றும் quad-thread Hyper-Threading தொழில்நுட்பம், 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

ஏசஸ் சென்போன் சி ரூ.5,999க்கு வெளியிடப்பட்டது

டூயல் சிம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு 4.45 கிட்காட் மூலம் இயங்குவதோடு ஏசஸ் நிறுவனத்தின் Zen UI யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

மேலும் 3ஜி, வைபை, ஏ-ஜிபிஎஸ் இருப்பதோடு 2100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

English summary
Asus Zenfone C launched at Rs 5,999. The Asus Zenfone C has been launched in India at Rs 5,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot