8ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 821 கொண்ட சென்போன் ஏஆர் : எப்போது வெளியீடு.?

வெளியாகவிருக்கும் அசுஸ் சென்போன் ஏஆர் உடன் நிறுவனத்தின் சென்போன் 3 ஸூம் கருவியானது இரட்டை கேமரா அம்சத்துடன் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளிகியாகியுள்ளது.

|

இந்த மாத தொடக்கத்தில், கூகுள் தனது ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டில் அசுஸ் சென்போன் ஏஆர் வரவிருக்கும் மாதங்களில் வரும் என்று உறுதிப்படுத்தியது. இப்போது, அசுஸ் சிஇஓ ஜெர்ரி ஷேன் புத்தம் புதிய அசுஸ் சென்போன் ஏஆர் ஜூன் மாத மத்தியில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இக்கருவி நிறுவனத்தின் ஒரு பகல் கனவு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாத இறுதியில் அமெரிக்க சந்தைக்குள் நுழையும் வண்ணம் அல்லது ஜூலை ஆரம்பத்தில் கூட சந்தை வரவு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அசுஸ் சென்போன் ஏஆர் அறிமுகமான இரண்டு மாதங்களில் இக்கருவி இந்தியாவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்போன் ஏஆர்

சென்போன் ஏஆர்

வெளியாகவிருக்கும் அசுஸ் சென்போன் ஏஆர் உடன் நிறுவனத்தின் சென்போன் 3 ஸூம் கருவியானது இரட்டை கேமரா அம்சத்துடன் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளிகியாகியுள்ளது. இருப்பினும், அசுஸ் சென்போன் 3 ஸூம் மற்றும் சென்போன் ஏஆர் கருவியுடன் இணைந்து வெளியிடப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சென்போன் ஏஆர் கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில் ஒரு 5.7 அங்குல சூப்பர் அமோஎல்இடி க்யூஎச்டி உடன் 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது.

க்வால்காம்

க்வால்காம்

மேலும், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் மற்றும் 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

கேமரா

இது ஒரு 23 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்318 தொகுதி மற்றும் ட்ரைடெக்+ ஆட்டோபோகஸ் (TriTech + autofocus) அமைப்பு, இரட்டை- பிடிஏஎப், இரண்டாவது- தலைமுறை லேசர் ஃபோகஸ், மற்றும் தொடர்ச்சியான-கவனம் போன்ற அம்சங்கள் கொண்ட ரியர் கேமரா கொண்டுள்ளது.

வீடியோ

வீடியோ

மேலும், பின்புற கேமரா 4-அக்ஸிஸ் ஓஐஎஸ் (ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல்), 3-ஆக்சிஸ் இஐஎஸ் (எலக்ட்ரானிக் பட உறுதிப்படுத்தல்) ஆகிய அம்ஸங்களை வீடியோ பதிவிற்காக கொண்டுள்ளது மற்றும் 4கே வீடியோவை பதிவு செய்யக்கூடிய திறனும் கொண்டது.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

செல்பீ கேமராவை பொறுத்தமட்டில்எப் / 2.0 துளை மற்றும் ஒரு 85 டிகிரி அகல கோணம் லென்ஸ் கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது ருகிறது. 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் ஒரு 3300எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில்

இந்தியாவில்

மேலும் வரவிருக்கும் சென்போன் 3 ஸூம் கடந்த ஆண்டு வெளியான சென்போன் ஸூம் கருவியின் மேம்படுத்தல் பதிப்பு என்பதும் இக்கருவி இந்தியாவில் ரூ.25,781/- என்ற ஆரம்ப விலை நிர்ணயம் பெறலாம் என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus ZenFone AR with Snapdragon 821, 8GB RAM will be available by mid-June. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X