Home
Mobile

ஆசஸ் ஜென்போன் 9 பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கிடைத்தது புதிய அப்டேட்.!

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் ஜென்போன் 9 ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஆசஸ் ஜென்போன் 9 ஆனது இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆசஸ் ஜென்போன் 9 பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள இருக்கும்.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

ஆசஸ் ஜென்போன் 9 மாடலுக்கு கிடைத்துள்ள இந்த புதிய அப்டேட் ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள பயனர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. விரைவில் இந்த புதிய அப்டேட் அனைத்து நாட்டில் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆசஸ் வெளியிட்ட ஆண்ட்ராய்டு 13 அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு எண் 33.0804.2060.65 ஐக் கொண்டுள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. சிறிய டிஸ்பிளே என்பதால் கையில் பிடித்து பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ, 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த போன்.

 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார்

50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார்

ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன். ஸ்லோ மோஷன், லைட் டிரெயில், பனோரமா, நைட் ஃபோட்டோகிராபி மற்றும் டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற சிறப்பான அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 9 போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு அருமையாகஇருக்கும். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்றவைகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் இந்த போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

புதிய போன்

ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு IP68-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடல்.

4300 எம்ஏஎச் பேட்டரி

4300 எம்ஏஎச் பேட்டரி

ஜென்போன் 9 போன் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 8 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் வழங்குவதாகநிறுவனம் கூறுகிறது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6/6எஸ்இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NavIC, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus Zenfone 9 smartphone received Android 13 update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X