வாங்குனா இப்படி ஒரு மொபைல் வாங்குங்க: Asus ஜென்போன் 9 விமர்சனம்.!

|

ஆசஸ் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு போன்களுக்கு இல்லை என்றே கூறலாம். ஆனாலும் இந்நிறுவனம் சியோமி, விவோ, ஒப்போ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஆசஸ்.

ஆசஸ் ஜென்போன் 9

ஆசஸ் ஜென்போன் 9

சமீபத்தில் ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ஜென்போன் 9 எனும் ஸ்மார்ட்போனை தைவானில் அறிமுகம் செய்தது. இந்த போன் நாம் எதிர்பார்த்த அனைத்து
சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

டிஸ்பிளேவில் புதுமை

டிஸ்பிளேவில் புதுமை

இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அனைதும் பெரிய டிஸ்பிளே வசதியுடன் தான் வருகிறது. ஆனால் ஆசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள
ஜென்போன் 9 மாடல் ஆனது கைகளில் எளிமையாக பிடித்து பயன்படுத்துவதற்குத் தகுந்த சிறிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த போன் 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஐபோன்களை போன்றே
ஒரு உணர்வைத் தருகிறது என்றே கூறலாம்.

உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?

 டிஸ்பிளே அம்சங்கள்

டிஸ்பிளே அம்சங்கள்

புதிய ஆசஸ் ஜென்போன் 9 மாடல் ஆனது 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ, 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்றஅட்டகாசமான டிஸ்பிளே அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி இதில் இருப்பதால் அனைத்து இடங்களிலும்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடலுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ஆதரவும் உள்ளது. எனவே இது சிறந்த பாதுகாப்பு வசதியை
கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..

 தனித்துவமான கேமரா

தனித்துவமான கேமரா

பிரபலமான நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களில் கூட இதுபோன்ற கேமரா வசதி இல்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்தஜென்போன் 9 மாடல் ஆனது 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

குறிப்பாக குறைந்த ஒளி உள்ள இடங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். அதேபோல் இதில் 12எம்பி
அல்ட்ரா வைடு லென்ஸ் இருப்பதால் நீங்கள் நினைத்தப் படங்களை அப்படியே எடுக்க முடியும்.

மேலும் ஸ்லோ மோஷன், லைட் டிரெயில், பனோரமா, நைட் ஃபோட்டோகிராபி மற்றும் டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற சிறப்பானகேமரா அம்சங்களை வழங்குகிறது இந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

சூப்பரான செல்பி கேமரா

சூப்பரான செல்பி கேமரா

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். பின்பு இந்த போனில் HyperSteady அம்சத்தைப்
பயன்படுத்தும்போது ஒரு தரமான வீடியோவை எடுக்க முடியும்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

புதிய ஆசஸ் ஜென்போன் 9 ஆனது தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் இருப்பதால் நீங்கள் நினைத்த அனைத்து கேமிங் ஆப்ஸ்களையும் அருமையாக பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடல் தனித்துவமான Adreno 730 GPU ஆதரவைக் கொண்டுள்ளது. மொத்தமாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் மற்றும் வேகத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

 பேட்டரி எப்படி?

பேட்டரி எப்படி?

புதிய ஆசஸ் ஜென்போன் 9 மாடல் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதற்கு பதிலாக 5000 எம்ஏஎச் அல்லது 5500 எம்ஏஎச்பேட்டரி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. அதாவது இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 8 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

அதேபோல் இந்த ஆசஸ் போன் 30Wபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஆடியோ வசதி

சிறந்த ஆடியோ வசதி

மேலும் இந்த புதிய ஆசஸ் போனில் சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் OZO Audio Noise Reduction தொழில்நுட்ப வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 என்ன விலை?

என்ன விலை?

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6/6எஸ்இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NavIC, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ஆசஸ் போன்.

ஆசஸ் ஜென்போன் 9 ஸ்மார்ட்போன் முதலில் தைவானில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆசஸ் ஜென்போன் 9 போனின் விலை EUR 799 (இந்திய மதிப்பில் ரூ.64,800-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் மிட்நைட் பிளாக், மூன்லைட் ஒயிட், சன்செட் ரெட் மற்றும் ஸ்டார்ரி ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 9 Review in Tamil: Camera, Battery, Price, Availability Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X