விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் மாடல்கள்

|

அண்மையில் சர்வதேச சந்தையில் அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் அசத்தலான தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அசுஸ் நிறுவனம் சார்பில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால், விரைவில் அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப்

அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் மாடல்களின் மென்பொருள் வசதி, கேமரா வடிவமைப்பு போன்ற அனைத்திற்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அசுஸ் நிறவனம். மேலும் சென்ஃபோன் 8 ப்ளிப் சாதனம் தனித்துவமான கேமரா வசதியைக் கொண்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த இரண்டு சாதனங்களின் விலை மற்றும் சிறப்பமசங்களைப் பார்ப்போம்.

அசுஸ் சென்ஃபோன் 8 அம்சங்கள்

அசுஸ் சென்ஃபோன் 8 அம்சங்கள்

 • டிஸ்பிளே: 5.9-இன்ச் எப்எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளே (2400 x 1080 பிக்சல்)
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ்
 • 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
 • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
 • கொரில்லா கிளாஸ் Victus ஆதரவு
 • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660 ஜிபியு வசதி
 • ரேம்: 16ஜிபி
 • மெமரி 256ஜிபி
 • ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா
 • செல்பீ கேமரா: 12எம்பி
 • பேட்டரி: 4000 எம்ஏஎச்
 • 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ZenUI 8
 • யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5 ஆடியோ ஜாக்,
 • வைஃபை 6, புளூடூத் 5.2, 5ஜி,
 • என்எப்சி, ஜிபிஎஸ்
 • அசுஸ் சென்ஃபோன் 8 விலை

  அசுஸ் சென்ஃபோன் 8 விலை

  அசுஸ் சென்ஃபோன் 8 ஆனது அப்சிடியன் பிளாக் மற்றும் ஹாரிசான் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் பேஸ் வேரியண்ட் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.44,095-ஆக உள்ளது. பின்பு இதன் டாப் எண்ட் மாடல் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.71,040 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சரியான நேரத்தில் இலவச சலுகையை வழங்கிய ஏர்டெல் நிறுவனம்.!சரியான நேரத்தில் இலவச சலுகையை வழங்கிய ஏர்டெல் நிறுவனம்.!

  அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப்

  அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப்

  • டிஸ்பிளே: 6.67-இன்ச் எப்எச்டி பிளஸ் Samsung AMOLED டிஸ்பிளே (2400 x 1080பிக்சல்)
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ்
  • 200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
  • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660 ஜிபியு வசதி
  • ரேம்: 8ஜிபி
  • மெமரி 256ஜிபி
  • ப்ளிப் கேமரா வழங்கப்பட்டுள்ளது
  • ப்ளிப் கேமரா வசதி: 64எம்பி பிரைமரி சென்சார் +12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா
  • பேட்டரி: 5000 எம்ஏஎச்
  • 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ZenUI 8
  • யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5 ஆடியோ ஜாக்,
  • வைஃபை 6, புளூடூத் 5.2, 5ஜி,
  • என்எப்சி, ஜிபிஎஸ்
  • அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப் மாடலின் விலை

   அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப் மாடலின் விலை

   அசுஸ் சென்ஃபோன் 8 பிளிப் மாடல் ஆனது பிளாக் மற்றும் கிளேசியல் சில்வர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Asus ZenFone 8, ZenFone 8 Flip May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X