Home
Mobile

மே 12 ஆம் தேதி அறிமுகமாகும் புதிய Asus ZenFone 8 சீரிஸ் போன்கள்.. மினி வெர்ஷனும் இருக்கு போலயே?

ஆசஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று, ஆசஸ் ஜென்ஃபோன் 8 தொடருக்கான வெளியீட்டு நிகழ்வு மே 12 ஆம் தேதி மாலை 07:00 மணிக்கு CEST (10:30 PM IST) இல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரவிருக்கும் வரிசையில் ஜென்ஃபோன் 8, ஜென்ஃபோன் 8 ப்ரோ மற்றும் ஜென்ஃபோன் 8 மினி ஆகிய மூன்று சாதனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜென்ஃபோன் 8 இல் மோட்டார்சைஸ்டு கேமரா இருக்குமா? இருக்காதா?

ஜென்ஃபோன் 8 இல் மோட்டார்சைஸ்டு கேமரா இருக்குமா? இருக்காதா?

ஜென்ஃபோன் 8 தொடரின் அறிமுகத்தை டீஸ் செய்யும் டீசர் வீடியோவை ஆசஸ் நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டது. நிறுவனத்தின் டீசரை பார்த்தால் மோட்டார்சைஸ்டு கேமராக்கள் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதில் ஆசஸ் ஜென்ஃபோன் 8 தொடரில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்பிளேவில் உள்ள மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச்-ஹோல் கேமரா கட் அவுட் டிசைன் இருப்பதை வீடியோ தெளிவாகக் காட்டியுள்ளது.

ஜென்ஃபோன் 8 ஃபிளிப் என்று ஒரு மாடல் அறிமுகமாகுமா?

ஜென்ஃபோன் 8 ஃபிளிப் என்று ஒரு மாடல் அறிமுகமாகுமா?

இது ஜென்ஃபோன் 8 ஸ்மார்ட்போன்களில் வரும் எதோ ஒரு மாடலாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் நிச்சயமாக ஃபிளிப் கேமரா இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும், எக்ஸ்டிஏ-டெவலப்பர் வெளியிட்ட அறிவிப்பின் படி ARCore ஐ ஆதரிக்கும் சாதனங்களுக்கான கூகிளின் பட்டியலில் "ஜென்ஃபோன் 8 ஃபிளிப்" என்ற மாடலை கண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

16 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் மிரட்டலான போன்

16 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் மிரட்டலான போன்

ஆசஸ் ஜென்ஃபோன் 8 / ஜென்ஃபோன் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் உடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பெஞ் பட்டியலில் 1121 மற்றும் 3662 ஆகிய சிங்கள் கோர் மற்றும் மல்டி கோர் டெஸ்டிங் மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

ஆப்பிள் மினி போன்று ஜென்ஃபோன் 8 மினி வெர்ஷன்

ஆப்பிள் மினி போன்று ஜென்ஃபோன் 8 மினி வெர்ஷன்

இந்த வரிசையில் மிகச்சிறிய தொலைபேசியாக, ஜென்ஃபோன் 8 மினி, 5.9 இன்ச் கொண்ட 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட டிஸ்பிளே உடன் வெளிவரும். இந்த சாதனம் 64MP சோனி IMX686 சென்சார் மற்றும் சோனி IMX663 சென்சார்களுடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. அதேபோல், 8ஜிபி ரேம் உடன் செயல்படும் ஜென்ஃபோன் 8 வரிசையில் உள்ள மற்றொரு மாடல் 1,124 சிங்கள் கோர் மற்றும் 3,669 மல்டி கோர் மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 8 will be launching In India on May 12 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X