ஆசஸின் அட்டகாசமான அடுத்த ஜென்ஃபோன் 8 சீரிஸ் விபரம்.. ஆப்பிள் போல் மினி மாடலும் இருக்கா? ​

|

ஆசஸ் நிறுவனம் புதிதாக ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான செய்தியின் படி, வரவிருக்கும் புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 8 தொடர் பற்றிய தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. ஜென்ஃபோன் 8 வரம்பில் ஆசஸ் ஜென்ஃபோன் 8 மற்றும் ஆசஸ் ஜென்ஃபோன் 8 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் மட்டுமே வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது மூன்றாவது மாடலாக ஆசஸ் ஜென்ஃபோன் 8 மினி அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்

புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்

அதேபோல், வரவிருக்கும் புதிய ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் குறைந்தது மூன்று மாடல்களும் இருக்கக்கூடும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் முக்கிய சில முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன் படி இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசஸின் முதன்மை ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் மினி டிஸ்பிளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் மினி டிஸ்பிளே

ஆசஸ் ஸ்மார்ட்போனின் வரம்பில் மாறுபட்ட மாடல்களின் தகவல்களைடிப்ஸ்ட்டர் வெளியிட்டுள்ளார். சேக் (Sake) என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட மாதிரி எண் ZS590KS கொண்ட ஸ்மார்ட்போனை இந்த இடுகை குறிப்பிடுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய சிறிய 5.9' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவை ஆதரிக்கும் என்றும், டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, இந்த மாதிரி எண் ஜென்ஃபோன் 8 மினி ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

இதில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் இருக்கா?

இதில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் இருக்கா?

இது ஸ்னாப்டிராகன் 888 SoC ஆல் இயக்கப்படலாம் என்றும், இதில் பல கேமரா சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் தகவலின் படி, இதில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 மற்றும் சோனி ஐஎம்எக்ஸ் 663 சென்சார்கள் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாடல் எண் ZS673KS உடன் மற்றொரு ஸ்மார்ட்போன் பட்டியலில் உள்ளது, இது ஜென்ஃபோன் 8 ப்ரோவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மாடல் புதிய பெயர்

புதிய மாடல் புதிய பெயர்

இது ஸ்னாப்டிராகன் 888 SoC ஆல் இயக்கப்படலாம் என்றும், இந்த ஸ்மார்ட்போனில் 24 மெகாபிக்சல் OV24B1Q சென்சாருடன் வரக்கூடும், பின்புறத்தில் கேமராக்களில் 64 மெகாபிக்சல் சோனி IMX686, OM13855 மற்றும் OV8856 சென்சார்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டிப்ஸ்டர் @ReaMEIZU கூடுதலாக பிக்காசோ மற்றும் ஓட்கா என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றியும் சில தகவலை வெளியிட்டுள்ளார்.
பிக்காசோ ZS675KW என குறியீட்டு பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இது இதேபோன்ற 24 மெகாபிக்சல் OV24B1Q முன் கேமராவைக் கொண்டிருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆசஸ் ஜென்ஃபோன் 8 வரிசையில் புதிய போன்

ஆசஸ் ஜென்ஃபோன் 8 வரிசையில் புதிய போன்

இதில் பின்புற கேமராக்களில் 64 மெகாபிக்சல் சோனி IM686 சென்சார், சோனி IMX363 சென்சார் மற்றும் மற்றொரு OV08A சென்சார் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசஸ் ஓட்கா என்ற பெயர் உடன் காணப்படும் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆசஸ் ஜென்ஃபோன் 8 வரம்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆசஸ் நிறுவனம் இதுவரை எந்த விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus Zenfone 8 Mini Won’t Be A Mini Smarphone Unlike Its Name : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X