Home
Mobile

16ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போன்.!

அசுஸ் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தரமான கேமராக்கள் மற்றும் சிறந்த சிப்செட் வசதியுடன் இந்த அசுஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

16ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போன்.

அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் 7 மினி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் இதை தொடர்ந்து அந்நிறுவனம் அசுஸ் சென்ஃபோன் 8 மினி மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசுஸ் சென்ஃபோன் 8 மினி, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ரோ, அசுஸ் சென்ஃபோன் 8 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த அசுஸ் சென்ஃபோன் 8 மின மாடல் ஆனது 16ஜிபி ரேம் உடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போன்.

வாகப் பார்ப்போம். அதன்படி இந்த அசுஸ் சென்ஃபோன் 8 மினி மாடல் ஆனது 30 வாட் rapid சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக அசுஸ் சென்ஃபோன் 8 மினி மாடலில் 5.92-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

16ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போன்.

அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த சோனி ஐஎம்எக்ஸ் 686 64 மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய சோனி ஐஎம் 663 இமேஜ் சென்சார் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான அசுஸ் சென்ஃபோன் 8 மினி மாடல். மேலும் அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அசுஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

16ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போன்.

அசுஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன், 6.78' இன்ச் கொண்ட 1080x2400 பிக்சல்கள் தீர்மானம் உடைய முழு எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 20: 9 என்ற விகித டிஸ்பிளே விகிதம் மற்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் எச்டிஆர் 10 + ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் மற்றும் 18 ஜிபி ரேம் என நான்கு வெவ்வேறு மாடல்களில் வருகிறது.

இது 1.80 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன், மற்ற ரேம் வகைகளும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அசுஸ் ROG போன் 5 ஸ்மார்ட்போன் சாதனம் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி என்பது இதில் 2x 3000mAh பேட்டரிகள் மூலம் தடையில்லாத சக்தி வழங்கப்படுகிறது. 65W ஹைபர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 30 நிமிடங்களில் 70% சார்ஜ் செய்கிறது. அதேபோல், 52 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்து முடிக்கிறது. இது இன்-பில்ட் கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. இது ROG UI உடன் Android 11 இயக்க முறைமையில் இயக்குகிறது.

16ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போன்.

அசுஸ் ROG போன் 5 கேமிங் ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கேமராவாக 13 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கேமராவாக 5 மெகாபிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது. செல்பி அனுபவத்திற்காக முன்பக்கத்தில், 24 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 8 Mini May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X