ஒருவழியா வெளியீட்டு தேதி அறிவிப்பு: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 7!
ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஆகஸ்ட் 26 அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பல்வேறு சிறப்பம்சங்களோடு அறிமுகப்படுத்த உள்ளது.

ஆசஸ் ஜென்ஃபோன் 7
ஆசஸ் ஜென்ஃபோன் 7 இன் வெளியீட்டு தேதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவானில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆசஸ் ஜென்ஃபோன் 7, 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசஸ் ஜென்ஃபோன் 6 இன் வாரிசாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஆசஸ் இசட் பிரிவு
ஆசஸ் ஜென்ஃபோன் 6 பின்னர் இந்திய சந்தையில் ஆசஸ் இசட் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசஸ் ஜென்ஃபோன் 7 தைவானுக்கு வெளியே உள்ள சந்தைகளில் கிடைக்குமா என்பது இன்னும் தகவல் ஏதும் வெளிவரவில்லை.

வெளியான கசிவுகள்
வெளியான கசிவுகளின்படி ஆசஸ் ஜென்ஃபோன் 7 ப்ரோ மாடல் அறிமுகத்தை குறித்தது. இதையடுத்து நிறுவனம் ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இதுகுறித்த நேரடி ஸ்ட்ரீம் வீடியோவை யூடியூப்பில் வெளியிட உள்ளது. இந்த நேரடி ஸ்ட்ரீம் வீடியோ சாதனங்களைப் பற்றிய சிறிய தகவல்களை வெளியிடுகிறது.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம்
இந்த நிகழ்வானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவான் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தியாவில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவை வைத்து பார்க்கையில் குவாட் கேமரா அமைப்பைக் காட்டுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
குவால்காம் பொருத்தவரை சென்ஹைசர் 7 குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC செயலி மூலம் இயக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வதந்தியான ஆசஸ் ஜென்ஃபோன் 7 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

6.7 அங்குல டிஸ்ப்ளே
முந்தைய கீக்பெஞ்ச் கசிவின்படி இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் பெறும் என்பதைக் குறிக்கிறது, ஆசஸ் ஜென்ஃபோன் 7 என்.சி.சி சான்றிதழிலும் காணப்பட்டது, பட்டியலிடும் குறிப்புகளின்படி 6.7 அங்குல காட்சி, 512 ஜிபி வரை உள்சேமிப்பிடத்தையும் வழங்குகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் 4,115 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு விருப்பங்கள்
இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில் வைஃபை 6, ப்ளூடூத் வி 5 மற்றும் என்எப்சி ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி, ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஐ பிறபகுதிகளில் நிறுவனம் அறிமுகப்படுத்துமா என்பது தெளிவாக இல்லை.


Click it and Unblock the Notifications