டூயல் கேமராவுடன் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

அசுஸ் சென்போன் 6 சாதனத்தில் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகன்டரி வைட்-ஆங்கிள் கேமரா எனஇரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

|

ஸ்பெயின் நாட்டில் புதிய அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அசுஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பாப்-அப் செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இப்போது அசுஸ் சென்போன் 6 சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

 கேமரா:

கேமரா:

அசுஸ் சென்போன் 6 சாதனத்தில் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகன்டரி வைட்-ஆங்கிள் கேமரா என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை

பேட்டரி-விலை

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது, பின்பு
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மதிப்பில்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -39,100-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -43,800-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -47,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus ZenFone 6 With Rotating Camera, Snapdragon 855 SoC Launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X