விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது
ஸ்பெயின் நாட்டில் புதிய அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக இந்த சாதனம் பாப்-அப் செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இப்போது அசுஸ் சென்போன் 6 சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

கேமரா:
அசுஸ் சென்போன் 6 சாதனத்தில் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகன்டரி வைட்-ஆங்கிள் கேமரா என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை
அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மதிப்பில்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -39,100-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -43,800-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -47,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








