Home
Mobile

அசுஸ் சென்போன் 5இசெட் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 5இசெட் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவித்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்மாடல் சில்வர் மற்றும் நீல நிறத்தில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சென்போன் 5இசெட் மாடலுக்கு ரூ.3000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சென்போன் 5இசெட் மாடலுக்கு ரூ.3000-வரை
விலைகுறைக்கப்பட்டு ரூ.28,999-விலையில் விறபனை செய்யப்படுகிறது.

 இரட்டை கேமரா அமைப்பு.!

இரட்டை கேமரா அமைப்பு.!

ம்சங்களை பொறுத்தமட்டில, சென்போன் 5z ஆனது 6.2 அங்குல முழு எச்டி+ எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடனாக 8 ஜிபி வரையிலான ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. உடன் 256 ஜிபி வரையிலான
உள்ளடக்க சேமிப்பு ஆதரவையும் வழங்கும். கேமரா பிரிவில், அசுஸ் மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு தேர்வு செய்துள்ளது.

போர்ட்ரெயிட் நிலை காட்சி.!

போர்ட்ரெயிட் நிலை காட்சி.!

அதாவது, ஒரு பெரிய 1.4 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் உடனான 8 எம்பி இரண்டாம் நிலை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் இரண்டாம் நிலை சென்சார் அந்த போர்ட்ரெயிட் நிலை காட்சிகளை உருவாக்க அனுமதிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது

ஆண்ட்ராய்டு பை இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு பை இயங்குதளம்:

அசுஸ் சென்போன் 5இசெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது, எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

சென்போன் 5இசெட் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி போர்ட், குவிக் சார்ஜ் 3.0 ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 5Z receives a price cut, now starts at Rs 24,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X