Home
Mobile

ஒன்ப்ளஸ் 6-ஐ விரட்டியைடிக்கும் சென்போன் 5Z; ப்ளிப்கார்டில்.!

அது பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

By Muthuraj

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 5z ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி சரியாக மதியம் 12:30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், அது பிரபல இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முதன் முதலாக MWC 2018 நிகழ்வில் உலகளாவிய ரீதியில் அறிவிக்கப்பட்டது. உடன் அடுத்த மாத வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம், ப்ளிப்கார்ட் அதன் பக்கத்தில் ஒரு டீஸர் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் நேரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பட்ஜெட் பிரிவில் மட்டுமின்றி.!

பட்ஜெட் பிரிவில் மட்டுமின்றி.!

அசுஸ் சமீபத்தில் அதன் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதும், இது பட்ஜெட் பிரிவின் கீழ் ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் பிரிவில் மட்டுமின்றி ஹை-எண்ட் பிரிவிலும் அசுஸ் நிறுவனமானது, சியோமி மற்றும் ஹானர் நிறுவனத்துடன் போட்டியிடுவதை அதிகரித்த வண்ணம் உள்ளது.

முதல் ஸ்மார்ட்போனாக.!?

முதல் ஸ்மார்ட்போனாக.!?

அதற்கு சரியான எடுத்துக்காட்டு தான் அசுஸ் சென்போன் 5z, ஒன்ப்ளஸ் 6 மற்றும் ஹானர் 10 க்ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000/- விலை வரம்பின் கீழ் வெளியாகும். குறிப்பிட்டபடி, அசுஸ் சென்போன் 5z ஆனது அசுஸ் சென்போன் 5 (2018), மற்றும் சென்போன் 5 லைட் உடன் இணைந்து MWC நிகழ்வில் வெளியானது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்கலுமே இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை, முதல் ஸ்மார்ட்போனாக சென்போன் 5z தான் வெளியாகிறது.

இரட்டை கேமரா அமைப்பு.!

இரட்டை கேமரா அமைப்பு.!

அம்சங்களை பொறுத்தமட்டில, சென்போன் 5z ஆனது 6.2 அங்குல முழு எச்டி+ எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடனாக 8 ஜிபி வரையிலான ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. உடன் 256 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பு ஆதரவையும் வழங்கும். கேமரா பிரிவில், அசுஸ் மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு தேர்வு செய்துள்ளது.

போர்ட்ரெயிட் நிலை காட்சி.!

போர்ட்ரெயிட் நிலை காட்சி.!

அதாவது, ஒரு பெரிய 1.4 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் உடனான 8 எம்பி இரண்டாம் நிலை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் இரண்டாம் நிலை சென்சார் அந்த போர்ட்ரெயிட் நிலை காட்சிகளை உருவாக்க அனுமதிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

இந்தியாவில் தோராயமாக ரூ.38,000/-க்கு வெளியாகலாம்.!

இந்தியாவில் தோராயமாக ரூ.38,000/-க்கு வெளியாகலாம்.!

ஒரு 3300 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான ன் இருவனத்தின் சென்யூஐ கொண்டு இயங்கும். ஒருசில சந்தைகளில் சென்போன் 5z ஆனது ஏற்கனவே வாங்க கிடைக்கின்றது. அந்த விலை நிர்ணயத்தின் படி பார்த்தல், இந்தியாவில் தோராயமாக ரூ.38,000/-க்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்ப்ளஸ் 6 மற்றும் ஹானர் 10 போன்றவற்றோடு போட்டியிடும் விலையில் வெளியாகும். ஆன்லைன் வழியிலான விற்பனையின் மூலம், அசுஸ் நிறுவனமானது அதன் 'பன்னாட்டு பிரிவின்' மூலோபாயத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Asus Zenfone 5z to launch in India on July 4 on Flipkart. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X