முன்னால ரெண்டு 20 எம்பி + பின்னால ரெண்டு 16எம்பி; வேறென்னப்பா வேணும்.?

இந்த அறிமுக நிகழ்வையொட்டி, அசுஸ் சென்போன் 5 லைட் ஸ்மார்ட்போனின் ரெண்டர் வெளியாக, அதன் வழியாக சில முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதென்ன அம்சங்கள் என்பதை விரிவாக காண்போம்.

|

அசுஸ் நிறுவனமானது அதன் சென்போன் 5 லைட் ஸ்மார்ட்போனை எப்போது அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலைப்பாட்டில் இக்கருவி வரவிருக்கும் (எம்டபுள்யூசி) மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 ஆம் நிகழ்வில் அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வையொட்டி, அசுஸ் சென்போன் 5 லைட் ஸ்மார்ட்போனின் ரெண்டர் வெளியாக, அதன் வழியாக சில முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதென்ன அம்சங்கள் என்பதை விரிவாக காண்போம். வெளியாகும் சென்போன் 5 லைட் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் குவாட் கேமராக்கள் மற்றும் நவநாகரீகமான 18: 9 அளவிலான திரை விகிதம் திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒப்பிடும்போது

ஒப்பிடும்போது

மேலும் கூறப்படும் சென்போன் 5 லைட் ஆனது சென்போன் 5 தொடரின்கீழ் இதுவரை வெளியான அனைத்து கருவிகளுடனும் ஒப்பிடும்போது மிகவுமொரு லைட் பதிப்பாக இருக்குமென்பதும், இக்கருவியுடன் சேர்த்து மேலும் சில சென்போன் 5 ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளாக் மற்றும் ரெட்

பிளாக் மற்றும் ரெட்

அம்சங்களை பொறுத்தமட்டில், சென்போன் 5 லைட் ஆனது (வெளியான ரெண்டரில் வெள்ளை நிறத்தில் காட்சிப்படுகிறது இருப்பினும் பிளாக் மற்றும் ரெட் போன்ற மற்ற வண்ண விருப்பங்களில் வெளியாக வாய்ப்புள்ளது) ஒரு 18: 9 திரை விகிதம் கொண்ட அளவுகள் தெரியாத டிஸ்பிளே கொண்டுள்ளது.

இரண்டு முன்பக்க கேமரா

இரண்டு முன்பக்க கேமரா

இருப்பினும் எதிர்பார்க்கப்படும் திரை அளவானது 5.7 அங்குல மற்றும் 5.9 அங்குல ஆகிய இரண்டிற்கும் இடையே ஏதோவொரு புள்ளியை எட்டலாம் என்பது வெளிப்படை. உடன் இக்கருவி ஒரு எல்இடி ஃப்ளாஷ் கொண்ட இரண்டு முன்பக்க கேமராக்களை கொண்டுள்ளது.

ஸ்க்ரீன்-நேவிகேஷன் பொத்தான்கள்

ஸ்க்ரீன்-நேவிகேஷன் பொத்தான்கள்

பின்பக்கத்தை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட மேலுமொரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. உடன் பின்புற கேமரா தொகுதிக்கு கீழே ஒரு கைரேகை ஸ்கேனரும் உள்ளது. மேலும் அசுஸ் நிறுவனத்தின் முழு சென்போன் 5 தொடரிலும்இடமபெற்றுள்ள ஸ்க்ரீன்-நேவிகேஷன் பொத்தான்கள் ஆனது இக்கருவியிலும் இடம்பெறலாம்.

இரண்டு 20எம்பி + இரண்டு 16எம்பி

இரண்டு 20எம்பி + இரண்டு 16எம்பி

முன்னர் வெளியான லீக்ஸ் அறிக்கையின்படி, இக்கருவியின் செல்பீ கேமராவை பொறுத்தமட்டில் 2 x 20எம்பி மற்றும் பின்பக்கத்தை பொறுத்தமட்டில் 2 x 16எம்பி கேமராக்கள் இடம்பெறலாம். இருப்பினும் இதுவொரு லைட் பதிப்பு என்பதால் இதில் இரண்டு 20எம்பி மற்றும் இரண்டு 16எம்பி சென்சார்கள் இடம்பெற வாய்ப்பில்லை.

டெப்த் சென்சார்

டெப்த் சென்சார்

பதிலாக, ஒரு 20எம்பி முதன்மை கேமரா மற்றும் முன் ஒரு 2எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் ஒரு 16எம்பி முதன்மை சென்சார் மற்றும் ஒரு 2எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டு வெளியாகலாம். இதன் இரண்டாம் நிலை கேமரா படங்களுக்கு ஆழம் சேர்க்க டெப்த் சென்சாராக செயல்பட வேண்டும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

இதர அம்சங்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஆனால் அசுஸ் ஏற்கனவே அதன் முழு சென்போன் 5 கருவியில் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டுள்ளதால் சென்போன் 5 லைட் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி இடம்பெறலாம். இக்கருவி சார்ந்த அதிகாரப்பூர்வ அம்சங்கள் மற்றும் அப்டேட்ஸ்களுக்கு, தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 5 Lite to Arrive With Quad Cameras and Snapdragon Processor, Launch Set for MWC 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X